தாராபுரம் அருகே சாலை விபத்தில் கணவன், மனைவி பலி: முதல்வர் இரங்கல்!
பஹல்காம் தாக்குதலுக்குப் பின் ஜம்முவிலிருந்து ஹஜ் யாத்திரை: 178 பயணிகள் புறப்பாடு!
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து முதல்கட்டமாக 178 பயணிகள் ஹஜ் புனித பயணத்தை இன்று(மே 4) தொடங்கினர். அவர்கள் அனைவரும் ஸ்ரீநகரிலிருந்து சவூதி அரேபியாவிலுள்ள மெக்காவுக்குச் செல்ல இன்று காலை விமான நிலையம் வந்தடைந்தனர்.
புனித ஹஜ் பயணத்தை வாழ்நாளில் ஒரு முறையாவது நிறைவேற்றுவது உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியா்களின் கட்டாயக் கடமையாக உள்ளது. அந்த வகையில், நிகழாண்டு ஹஜ் யாத்திரைக்கு ஜம்மு காஷ்மீரிலிருந்து முதல் கட்டமாக 178 யாத்ரீகர்கள் இன்று புறப்பட்டனர். அவர்களை அவர்தம் குடும்ப உறுப்பினர்கள் வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடா்ந்து, அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், ஹஜ் யாத்திரை செல்வோருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாதிருக்க பாதுகாப்பு படை வீரர்கள் உஷார் நிலையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.