தாராபுரம் அருகே சாலை விபத்தில் கணவன், மனைவி பலி: முதல்வர் இரங்கல்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குள்ளாய்ப்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நாகராஜ்(44), அவரது மனைவி ஆனந்தி(38) ஆகிய இருவரும் அங்குள்ள பாலத்திலிருந்து வண்டியிலிருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது மகள் தீட்சையா(12) படுகாயங்களுடன் கோவையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், உயிரிழந்த தம்பதியின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சமும், சிகிச்சையிலுள்ள சிறுமிக்கு ரூ. 1 லட்சமும் முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் .