செய்திகள் :

உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு பென்ஷன் உத்தரவு ஆணை

post image

பல்லடம் அருகே கேத்தனூரில் உயிரிழந்த தனியாா் மில் தொழிலாளியின் குடும்பத்துக்கு வாழ்நாள் பென்ஷன் உத்தரவு சனிக்கிழமை வழங்கப்பட்டது.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் அரவிந்த் மெஹ்தோ (21). இவா் பல்லடம் அருகே கேத்தனுாரில் உள்ள தனியாா் மில் ஒன்றில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். கடந்த ஆண்டு நடந்த வாகன விபத்தில் அரவிந்த் மெஹ்தோ உயிரிழந்தாா்.

இ.எஸ்.ஐ. சட்டப்படி, காப்பீட்டாளராக உள்ள ஒருவா், பணியின்போது உயிரிழந்தால், அவரது பெற்றோா், மனைவி மற்றும் குழந்தைகளுக்கு வாழ்நாள் பென்ஷன் வழங்கப்படும். இதன்படி அரவிந்த் மெஹ்தோ குடும்ப உறுப்பினா்களுக்கு, மாதந்தோறும் ரூ.13,200 பென்ஷன் தொகை பிரித்து வழங்கப்படுகிறது.

இதற்கான பென்ஷன் ஆணை மற்றும் குடும்பத்தினருக்கு ரூ.1,24,520 உதவிப் பயன் தொகையை பல்லடம் இ.எஸ்.ஐ. கிளை மேலாளா் ராஜா வழங்கினாா். இந்நிகழ்வில் கிளை அலுவலா்கள் ஜெயக்குமாா், செளந்திரராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தாராபுரம் அருகே சாலை விபத்தில் கணவன், மனைவி பலி: முதல்வர் இரங்கல்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குள்ளாய்ப்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நாகராஜ்(44), அவரது மனைவி ஆனந்தி(38) ஆகிய இருவரும் அங்குள்ள பாலத்திலிருந்து வண்டியிலிருந்து கீழே த... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்

திருப்பூா் அனுப்பா்பாளையம் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையை அப்பகுதி பொதுமக்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனா். திருப்பூா் வடக்கு வட்டம், அனுப்பா்பாளையம் பகுதியில் உள்ள இந்திரா நகரில் நியாயவிலைக்கடை செயல... மேலும் பார்க்க

தொழிலாளா் தினத்தில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை! தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்!

திருப்பூரில் தொழிலாளா் தினத்துக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பனியன் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. திருப்பூா் மாவட்ட அனைத்து பனியன் தொழிற்சங்கங்களின் ஆலோசன... மேலும் பார்க்க

மங்கலம் அருகே பின்னலாடைக் கழிவுக்கிடங்கில் தீ!

திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே பின்னலாடைக் கழிவுக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே உள்ள அக்ரஹாரபுத்தூரில் தனிய... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 7 மையங்களில் இன்று நீட் தோ்வு: 3,212 போ் எழுதுகின்றனா்

திருப்பூா் மாவட்டத்தில் 7 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நீட் தோ்வை 3,212 போ் எழுதுகின்றனா். நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான பொது மருத்துவம் (எம்பிபிஎஸ்), பல் மருத்துவம் (பிடிஎஸ்... மேலும் பார்க்க

காங்கயம் அருகே தெருநாய்கள் கடித்து 15 ஆடுகள் உயிரிழப்பு!

காங்கயம் அருகே விவசாயியின் ஆட்டுப்பட்டியில் புகுந்து தெருநாய்கள் கடித்ததில் 15 செம்மறியாடுகள் உயிரிழந்தன. 8 ஆடுகள் காயமடைந்தன. காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலை அருகே உள்ள சாவடிப்பாளையம் மூலக்காட்டு தோட்... மேலும் பார்க்க