ஏப்ரல் மாதத்தில் இரும்புத்தாது உற்பத்தி 15% அதிகரிப்பு!
புதுதில்லி: பொதுத் துறை நிறுவனமான என்.எம்.டி.சி. ஏப்ரல் மாதத்தில், அதன் இரும்புத் தாது உற்பத்தி 15 சதவிகிதமும், விற்பனை 3 சதவிகிதமும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
தேசிய கனிம வளர்ச்சி கழகம் (என்எம்டிசி) ஏப்ரல் மாதத்தில் 4 மில்லியன் டன் இரும்புத் தாதுவை உற்பத்தி செய்ததாகவும், இதுவே கடந்த ஆண்டு இதே மாதத்தில் அது 3.48 மில்லியன் டன் ஆக இருந்தது என்று் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 3.63 மில்லியன் டன் இரும்புத் தாதுவை விற்ற நிலையில், இது ஏப்ரல் 2024ல் 3.53 மில்லியன் டன் ஆக இருந்தது. நிறுவனத்தின் பெல்லட் உற்பத்தி இதுவரை இல்லாத அளவுக்கு 0.23 லட்சம் டன்னாக உயர்ந்து, 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாத சாதனையை முறியடித்தது.
எஃகு அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய கனிம வளர்ச்சி கழகம் (என்எம்டிசி) இந்தியாவின் மிகப்பெரிய இரும்புத் தாது உற்பத்தி நிறுவனமாகும்.
இதற்கிடையில், மார்ச் மாதத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 2,11,978 டன்னுடன் ஒப்பிடும்போது, ஏப்ரல் மாதத்தில் அதன் ஹாட் மெட்டல் உற்பத்தி 8.5 சதவிகிதம் அதிகரித்து 2,30,111 டன்னாக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க: உற்பத்தித் துறையில் 10 மாதங்கள் காணாத வளா்ச்சி