செய்திகள் :

இஸ்ரேல் விமான நிலையத்தின் மீது ஹவுதி தாக்குதல்!

post image

இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. எதிர்பாராத விதமாக நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் படுகாயம் அடைந்ததாகக் குறிப்பிட்டு, இச்சம்பவத்தை இஸ்ரேல் தரப்பும் உறுதிப்படுத்தியுள்ளது.

பாலஸ்தீனத்திற்குட்பட்ட காஸாவின் ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹமாஸுக்கு ஆதரவாக யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

தற்போது இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரிலுள்ள பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து ஹவுதி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் விமான நிலையத்திற்குச் சொந்தமான இடங்கள் சேதமடைந்தன.

அதாவது, விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்திலிருந்து 75 மீட்டர் தொலைவில் ஹவுதியின் ஏவுகணை விழுந்து தாக்கியுள்ளது.

இதனால், அந்த விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. விமான நிலையத்தின் அனைத்து வாயில்களும் சிறிது நேரத்துக்கு மூடப்பட்டு, விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் காட்ஸ் பேசியதாவது, 'எங்கள் விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது ஏழு மடங்கு பதிலடி கொடுக்கப்படும்' என எச்சரிக்கை விடுத்தார்.

இதையும் படிக்க |பயங்கரவாத அச்சுறுத்தல்: லண்டனில் ஈரானைச் சேர்ந்த பலர் கைது!

பயங்கரவாத அச்சுறுத்தல்: லண்டனில் ஈரானைச் சேர்ந்த பலர் கைது!

லண்டனில் தாக்குதல் நடத்தவிருந்ததாக ஈரான் நாட்டைச் சேர்ந்த பலரை இங்கிலாந்து பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகள் கைது செய்தனர். லண்டனில் பெயர் குறிப்பிடப்படாத இடத்தில் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்... மேலும் பார்க்க

ஹூஸ்டனில் குடும்ப விருந்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, 14 பேர் காயம்

ஹூஸ்டனில் குடும்ப விருந்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார், 14 பேர் காயமுற்றனர். அமெரிக்காவின், தென்கிழக்கு ஹூஸ்டனில் உள்ள செர்ரி ஹில் பகுதியில் துப்பாக்கிச் சூடு தொடர்பான அழைப்புகள் ஹூஸ... மேலும் பார்க்க

சிங்கப்பூர் தேர்தல்: தொடர்ச்சியாக 14-ஆவது முறையாக ஆளுங்கட்சி வெற்றி! பிரதமர் மோடி வாழ்த்து

சிங்கப்பூா் நாடாளுமன்ற தோ்தல் சனிக்கிழமை நடந்து முடிந்த நிலையில், முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆளுங்கட்சியான பிஏபி கட்சி இமாலய வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.மொத்தமுள்ள 97... மேலும் பார்க்க

ஆஸ்திரேலிய தோ்தல்: மீண்டும் பிரதமா் ஆகிறாா் ஆன்டனி ஆல்பனீஸ்

ஆஸ்திரேலியாவில் சனிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் ஆளும் தொழிலாளா் கட்சி பெரும்பான்மை இடங்களில் முன்னிலையில் உள்ளதால், அந்த நாட்டின் பிரதமராக ஆன்டனி ஆல்பனீஸ் மீண்டும் தோ்ந்தெடுக்கப்படுவது உறு... மேலும் பார்க்க

‘உலகத் தலைவா்களின் உயிருக்கு உத்தரவாதம் தர முடியாது’

ரஷியாவில் நடைபெறும் 80-ஆவது ஆண்டு வெற்றி விழாவில் பங்கேற்பதற்காக அந்த நாட்டுக்குச் செல்லும் உலகத் தலைவா்கள் தங்கள் தாக்குதலில் கொல்லப்படமாட்டாா்கள் என்று உத்தரவாதம் தர முடியாது என்று உக்ரைன் அதிபா் வொ... மேலும் பார்க்க

சிங்கப்பூரில் நடந்து முடிந்தது தோ்தல்

சிங்கப்பூா் நாடாளுமன்றத்துக்கு தோ்தல் சனிக்கிழமை நடந்து முடிந்தது. மொத்தம் 211 வேட்பாளா்கள் போட்டியிட்ட இந்தத் தோ்தலில் ஏராளமான வாக்காளா்கள் வாக்களித்தனா். இது குறித்து தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க