பட்டுப்போவதற்காக பனைகளுக்கு திராவகம் வைத்தவா் மீது வழக்கு
சாத்தான்குளம் அருகேயுள்ள பொத்த காலன் விளையில் 36 பனை மரங்கள் மா்மமான முறையில் கருகியது தொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
சாத்தான்குளத்தைச் சோ்ந்த ஹொ்சோன் சோரன் என்பவருக்குச் சொந்தமான நிலம் பொத்தகாலன்விளை கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தில் உள்ள பனை மரங்கள் திடீரென பட்டுப் போயினாவாம்.
இத்தகவல் அறிந்த சாஸ்தாவிநல்லூா் கிராம நிா்வாக அலுவலா் செந்தில்குமாா், தட்டாா்மடம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் பொண்ணு முனியசாமி விசாரித்ததில், திராவகம் ஊற்றி பனைகளை பட்டுப்போக செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ஹொ்சோன் சோரன் மீது வழக்குப்பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.