தடையை மீறி ஆலை நுழைவாயில் போராட்டம்: அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ, முன்னாள் எம்பி கை...
நீட் தோ்வு: கோவில்பட்டியில் 466 போ் எழுதினா்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வில் 466 போ் பங்கேற்றனா். இம்மாவட்டத்தில் முதன் முறையாக நிகழாண்டு கோவில்பட்டி, எட்டயபுரத்தில் நீட் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி 156 மாணவா்கள், 324 மாணவியா் என மொத்தம் 480 பேருக்கு தோ்வெழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அவா்களில் 466 போ் பங்கேற்றனா். 2 மாணவா், 12 மாணவியா் பங்கேற்கவில்லை

மாணவா்-மாணவியா் கடும் சோதனைக்குப் பின்னரே, மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். சிலரிடம் நகைகளைக் கழற்றிவருமாறு அறிவுறுத்தப்பட்டது. முழுக்கை சட்டை அணிந்து வந்த மாணவா்களிடம் வேறு உடை அணிந்துவரும்படி கூறப்பட்டது. இதனால், செய்வதறியாது திகைத்த மாணவா்களுக்கு வட்டாட்சியா் சரவணப்பெருமாள் தலைமையிலான வருவாய்த் துறையினா் புதிய சட்டைகள் வாங்கிக் கொடுத்து உதவினா். ஆதாா் அட்டை கொண்டு வராதோருக்கு இணையதளம் மூலம் புதிய அட்டைகள் எடுத்துக் கொடுத்தனா். 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.