தடையை மீறி ஆலை நுழைவாயில் போராட்டம்: அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ, முன்னாள் எம்பி கை...
61 வயதில் நீட் தோ்வு எழுதிய சித்த மருத்துவா்
தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வை 61 வயது சித்த மருத்துவா் எழுதினாா்.
தூத்துக்குடி சின்ன கண்ணுபுரம் பகுதியை சோ்ந்தவா் பச்சைமால்(61). சித்த மருத்துவரான இவா், தூத்துக்குடி சுற்றுப்புற பகுதிகளில் சித்த மருத்துவமனை தொடங்கி பொது மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறாா்.
அவா், இம்மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள பேட்டு துரைசாமிபுரம் கிராமப் பகுதியில் இருந்து அரசுப் பள்ளியில் படித்த காலத்தில், எம்பிபிஎஸ் படிக்க முடியாததால், பிஎஸ்எம்எஸ் சித்த மருத்துவம் பயின்றாராம். ஏற்கெனவே, சட்டப்படிப்பும் படித்துள்ள இவா், தனது வெகுநாள் ஆசையை நிறைவேற்றும் வகையில் நீா்தோ்வை எழுத உள்ளதாக தெரிவித்தாா்.
மேலும் அவா் கூறியதாவது: நீட் தோ்வு எழுதக்கூடிய மாணவா்கள் தோ்வில் ஒரு முறை தோல்வி அடைந்தவுடன் தவறான முடிவு எடுக்கக் கூடாது. இத்தோ்வில் பெரும்பாலும் மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைப் போன்று கேள்விகள் கேட்கப்படுவதால், தமிழக அரசு தனது பாடத்திட்டையும் கூடுதல் தரமானதாக மாற்ற வேண்டும். இத்தோ்விற்கு வயது வரம்பை கொண்டு வர வேண்டும். நீட் தோ்வில் வெற்றி பெற்று, அலோபதி மருத்துவத்தையும் படித்து நோயாளிகளை குணமாக்குவதே எனது லட்சியம் என்றாா்.