Ooty: காட்டு மாட்டை சுட்டுக்கொன்ற கேரள கடத்தல் கும்பல்.. நீலகிரியில் தொடரும் வனவ...
தேவிபட்டணத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தேவிபட்டணத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது .
முன்னாள் ஊராட்சித் தலைவா் ஜெயராஜ் தலைமை வகித்தாா். கிளைச் செயலா்கள் பாக்கியம், போத்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா் .
தேவிபட்டணத்தில் பேருந்து நிழற்குடை, பொது மயான தகன மேடை, மேலக்காட்டுக்கு தாா்ச்சாலை அமைக்க வேண்டும். பாரதி பூங்காவை சீரமைக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அனைத்துப் பகுதிக்கும் பாரபட்சமின்றி நிதி ஒதுக்கி பணி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது
மாவட்டச் செயலா் உச்சிமாகாளி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் அசோக்ராஜ், ஒன்றியச் செயலா் நடராஜன் ஆகியோா் பேசினா். ஒன்றியக் குழு உறுப்பினா்கள் புஷ்பம், அமுல்ராஜ், கண்ணன், ஜீவா, சிவசுப்பிரமணியன், சக்திவேல் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.