செய்திகள் :

PBKS vs LSG: `எப்போதும் டாப் ஆர்டரையே நம்பிக்கொண்டிருக்க முடியாது' -தோல்விக்குப் பின் பண்ட் விரக்தி

post image

லக்னோ அணிக்கும், பஞ்சாப் அணிக்கும் நேற்று (மே 4) தர்மசாலாவில் ஐ.பி.எல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, ப்ரப்சிம்ரனின் அதிரடி இன்னிங்ஸால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் குவித்தது. அதையடுத்து, 237 என்ற கடினமான இலக்கை நோக்கிக் களமிறங்கிய லக்னோ அணியால், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.

PBKS vs LSG - ஸ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பண்ட்
PBKS vs LSG - ஸ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பண்ட்

இறுதியில், 37 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற, அந்த அணியில் 91 ரன்கள் அடித்த ப்ரப்சிம்ரன் ஆட்டநாயகன் விருது வென்றார். புள்ளிப்பட்டியலில் 11 ஆட்டங்களில் 7 வெற்றிகளுடன் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது.

போட்டிக்குப் பின்னர் தோல்வி குறித்து பேசிய லக்னோ கேப்டன், "முக்கியமான கேட்சுகளைத் தவறவிடும்போது அது உங்களை மோசமாகக் காயப்படுத்தும். சரியான லெந்த்தை நாங்கள் பிடிக்கவில்லை. இருப்பினும் இவையனைத்தும் ஆட்டத்தின் ஒரு பகுதி. பிளேஆஃப் செல்லும் கனவு இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. அடுத்த 3 போட்டிகளிலும் நாங்கள் வெற்றி பெற்றால் நிச்சயமாக அதை நாங்களே சரிசெய்ய முடியும்.

PBKS vs LSG - ஸ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பண்ட்
PBKS vs LSG - ஸ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பண்ட்

உங்கள் டாப் ஆர்டர் நன்றாக பேட்டிங் செய்யும்போது அது நன்றாக இருக்கும். ஒவ்வொரு போட்டியிலும் அவர்கள் நன்றாக வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இதுவும் பார்ட் ஆஃப் தி கேம்தான். ஒவ்வொரு முறையும் அவர்களால் எங்களுக்கு கடினமான வேலையைச் செய்ய முடியாது. நீங்கள் முதலில் சொன்னது போல். எங்களின் ஆட்டத்தை நாங்கள் இன்னும் ஆழமாக எடுத்துக்கொள்ள வேண்டும்." என்று கூறினார்.

CSK: 'வெற்றியோ, தோல்வியோ... கர்ஜித்துக்கொண்டே இருங்கள்'- சிஎஸ்கே குறித்து சாக்ஷி தோனி

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டிற்கான 18-வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 9 போட்டிகளில் சிஎஸ்கே அணி தோல்வியைத் தழுவியிருக்கிறது. cskவெறும் இ... மேலும் பார்க்க

KKR vs RR : 'போராடிய ராஜஸ்தான்; 1 ரன் வித்தியாசத்தில் வென்ற KKR; - என்ன நடந்தது?

'கொல்கத்தா வெற்றி!'கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்திருந்தது. ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் நின்று மிரட்டலாக ஆடி 95 ரன்க... மேலும் பார்க்க

Yash Dayal : 'கேலி கிண்டல்கள் டு மேட்ச் வின்னர்!' - தொடர்ந்து சாதிக்கும் யாஷ் தயாள்

'சென்னை தோல்வி!'சென்னை அணி சின்னசாமியில் நடந்த போட்டியில் நெருங்கி வந்து பெங்களூருவிடம் தோற்றிருக்கிறது. கடந்த சீசனிலும் இப்படித்தான் பெங்களூருவுக்கு எதிராக சின்னசாமியில் நெருங்கி வந்து கடைசி ஓவரில் ச... மேலும் பார்க்க

RCB: `தினேஷ் கார்த்திக்தான் எங்களின் பேட்டிங்கை மாற்றினார்!' - ஆட்டநாயகன் ரோமாரியோ ஷெப்பர்ட்

'சென்னை தோல்வி!'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான சின்னசாமி மைதானத்தில் நடந்திருந்தது. அந்தப் போட்டியில் சென்னை அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருந்தது.Roma... மேலும் பார்க்க

CSK: 'கவனக்குறைவால் ரிவியூவ் எடுக்க தாமதித்த டெவால்ட் ப்ரெவிஸ்!' - சிஎஸ்கே கோட்டைவிட்ட இடம்!

சென்னை தோல்வி!ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சின்னசாமி மைதானத்தில் நடந்திருந்தது. இந்தப் போட்டியில் சென்னை அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருந்தது... மேலும் பார்க்க

Dhoni : 'நானே பழியை ஏற்கிறேன்!' - தோல்வி குறித்து தோனி பேச்சு

'சென்னை தோல்வி!'சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டி சின்னசாமி மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது. கடைசி வரை பரபரப்பாக சென்ற இந்தப் போட்டியில் சென்னை அணி... மேலும் பார்க்க