லட்சுமி ராமகிருஷ்ணன் முதல் அமரன் நடிகர் வரை: குக் வித் கோமாளியில் பங்கேற்றுள்ள ப...
TN Rain: எந்தெந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு? - வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு என்ன?
தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
கடந்த சில தினங்களாக கோடை வெயில் அதிகரித்து மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருந்த நிலையில் நேற்று (மே 4) சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து மக்களை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.
இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “தமிழகம் உள்ளிட்ட தென் மாநில பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பு நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று (மே5) மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் ஒருசில இடங்களில், வரும், 8-ம் தேதி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில், இன்றும், நாளையும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs