இந்திய பாதுகாப்புத்துறை இணையதளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் சைபர் தாக்குதல்!
வடமாநிலத்தில் புத்தகம் வைத்து நீட் எழுதுகிறார்கள்: சீமான்
வடமாநிலத்தில் புத்தகம் வைத்து நீட் எழுதுகிறார்கள் என்று நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தாம்பரத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் பெறப்பட்ட கையெழுத்துகள் எங்கே கொடுக்கப்பட்டன?.
சிற்றூரில் இருக்கும் மாணவருக்கு மருத்துவக் கனவு வரக்கூடாது என்பதற்காகவே நீட் தேர்வு. நீட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி என்ற பெயரில் பல ஆயிரம் கோடி சம்பாதிக்கிறார்கள்.
வட மாநிலங்களில் புத்தகம் வைத்து நீட் தேர்வு எழுதுகிறார்கள்.
என்னிடம் ஆதாரம் உள்ளது. மூக்குத்து, தோடு ஆகியவற்றில் பிட் எடுத்துச் சென்று நீட் தேர்வெழுத முடியுமா என்ன?. மூக்குத்தியில் பிட் வைக்கலாம் எனில் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாதா?.
மதுரையில் கூடிய தொண்டர்கள்: தவெக கட்சியினர் மீது வழக்குப்பதிவு!
நீட் தேர்வு குறித்து பல கேள்விகளை எழுப்புகிறோம். அதற்கு யாரிடத்திலும் பதில் இல்லை. நீட் தேர்வை தனியார் நிறுவனம் நடத்துகிறது. நீட் தேர்வு எழுதினாலே தரமான மருத்துவராக வர முடியுமா என்ன?.
மற்ற மாநிலங்களில் இல்லாத கெடுபிடிகள் தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் ஏன் இத்தகைய கெடுபிடிகள் என்று தெரிவித்தார்.