மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு சலுகைகள் அறிவிப்பு!
60 லட்சம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ள நிலையில் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் 60 லட்சம் பேருக்கு அடையாள அட்டை விநியோகம் செய்யும் பணியை 9 மாதங்களில் முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த அடையாள அட்டையில் உறுப்பினர் பெயர், மகளிர் சுய உதவிக்குழுவின் பெயர், பிறந்த தேதி, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட எண் உள்ளிட்ட விவரங்களுடன் க்யூஆர் கோடும்(QR CODE) இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசால் உருவாக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு முதல் கட்டமாகவும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 2ம் கட்டமாகவும் அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளது.
மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் அடையாள அட்டை வைத்திருக்கும் பெண்களுக்கு, ஏசி பேருந்துகளைத் தவிர்த்து அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் 25 கிலோ வரை தயாரிப்புப் பொருள்களைக் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம்.
கோ-ஆப்டெக்ஸில் துணிகள் வாங்கும்போது 5% தள்ளுபடி, இணைய சேவை மையங்களில் 10% தள்ளுபடி, கடன் உதவி திட்டங்களில் முன்னுரிமை உள்ளிட்ட பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: 5 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமை! நூலுரிமைத் தொகையை வழங்கினார் முதல்வர்!