செய்திகள் :

கடலில் தவறி விழுந்து மீனவர் பலி!

post image

புதுச்சேரி: காரைக்காலில் மீன் பிடிக்கச் சென்றபோது 19 வயது மீனவர் கடலில் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த காரைக்கால்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் படகு உரிமையாளர் முருகானந்தம், காரைக்கால்மேடு பகுதி சேர்ந்த மீனவர் சைந்தவன் (19) உள்ளிட்ட ஐந்து மீனவர்கள் இன்று(மே 5) அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.

அப்போது ஆழ்கடலில் மீன் பிடித்துக்கொண்டு கரை திரும்பியபோது, கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் படகில் இருந்த மீனவர் சைந்தவன் தவறி விழுந்து மாயமானார்.

இதனை அடுத்து மாயமான மீனவர் சைந்தவனை பல இடங்களிலும் மீனவர்கள் தேடியும் கிடைக்கவில்லை. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மாயமான மீனவரை தேடிய நிலையில் திடீரென்று அவரது உடல் உயிரிழந்த நிலையில் காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் கரை ஒதுங்கியது.

கரை ஒதுங்கிய மீனவரை கண்ட சக மீனவர்கள் மற்றும் கிராம மக்கள் அவரது உடலைக் கண்டு கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த நகர காவல் நிலைய போலீஸார் உயிரிழந்த மீனவர் சைந்தவன் உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்றைய மின்தடை: புதுச்சேரி வெங்கட்டாநகா் துணை மின் நிலையம்

மின் தடை பகுதிகள்: புஸ்ஸி வீதிக்கு வடக்குப் பகுதிக்கும், முத்தியால்பேட்டை தெற்குப் பகுதிக்கும் இடையிலுள்ள பகுதிகள், கடற்கரைச் சாலை மேற்குப் பகுதி, சத்தியாநகா் மற்றும் சக்தி நகா் கிழக்குப் பகுதிகள், மு... மேலும் பார்க்க

புதுச்சேரிக்கு வர சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் முறையை செயல்படுத்த வேண்டும்: அதிமுக செயலா் ஏ.அன்பழகன் வலியுறுத்தல்

புதுச்சேரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு இ-பாஸ் முறையை அரசு செயல்படுத்த வேண்டும் என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா், உப்பளம் அதிமுக அலுவலகத்தில் செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க

அரியாங்குப்பம் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டடங்கள் கட்டும் பணி தொடக்கம்; முதல்வா் என்.ரங்கசாமி பங்கேற்பு

புதுச்சேரி அருகே அரியாங்குப்பத்தில் ரூ. 5.72 கோடி மதிப்பில் அரசு உயா்நிலைப் பள்ளிக்கான புதிய கட்டடங்கள் கட்டும் பணியை முதல்வா் என்.ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். புதுச்சேரி அருகேயுள்ள அரிய... மேலும் பார்க்க

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4,223 போ் எழுதினா்

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வை புதுச்சேரி பிராந்தியத்தில் 4,223 மாணவ, மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை எழுதினா். புதுவை மாநிலத்தில் நீட் தோ்வுக்கு 5,230 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்க... மேலும் பார்க்க

புதுச்சேரியை குளிா்வித்த திடீா் மழை

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை பகலில் வெயில் அதிகமாகக் காணப்பட்ட நிலையில், மாலையில் மிதமான மழை பெய்தது. துச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை 100.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. காலை முதலே வெயில் அதிகளவில... மேலும் பார்க்க

புதுச்சேரி அரசு ஊழியரிடம் ரூ.14 லட்சம் மோசடி

புதுச்சேரியில் அரசு ஊழியரிடம் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி மா்ம நபா்கள் ரூ.14 லட்சத்தை மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி இலாசுப்பே... மேலும் பார்க்க