சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் 4வது காலாண்டு லாபம் சரிவு!
புதுதில்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், சுத்திகரிப்பு லாபம் குறைந்து, நிறுவனத்தின் 4-வது காலாண்டு நிகர லாபம் 25 சதவிகிதம் சரிந்துள்ளது.
கடந்த நிதியாண்டின், இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.627.89 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.469.93 கோடியாக இருந்தது. அதே வேளையில், அதன் வருவாய் ரூ.20,580.65 கோடியாக இருந்தது.
நிதியாண்டு 2024-25 நிகர லாபம் சரிந்து ரூ.173.53 கோடியாக இருந்த நிலையில், 2023-24 ஆம் ஆண்டு இது ரூ.2,711.25 கோடியாக இருந்தது.
2025ஆம் நிதியாண்டில் ஒவ்வொரு பீப்பாய் கச்சா எண்ணெயையும் எரிபொருளாக மாற்றியதன் மூலம் 4.22 அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டியதாக சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் தெரிவித்தது. இதுவே அதன் முந்தைய ஆண்டு பீப்பாய்க்கு 8.64 அமெரிக்க டாலராக இருந்ததாக தெரிவித்துள்ளது.
அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான இந்த நிறுவனம், 4-வது காலாண்டில் 2.974 மில்லியன் டன் கச்சா எண்ணெயை பதப்படுத்தியது. இதுவே 2024 ஜனவரி முதல் மார்ச் வரையான காலத்தில் இது 3.087 மில்லியன் டன் கச்சா எண்ணெயை பதப்படுத்தியது.
நிதியாண்டு 2024-25 பதப்படுத்திய கச்சா எண்ணெய் 10.454 மில்லியன் டன்களாக இருந்த நிலையில், இதுவே அதன் முந்தைய ஆண்டு 11.642 மில்லியன் டன்னாக இருந்தது.
இதையும் படிக்க: பஜாஜ் கன்ஸ்யூமர் கேர் 4வது காலாண்டு லாபம் 13% சரிவு!