கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
சிதம்பரம் ஸ்ரீ ராகவேந்திரா கலை, அறிவியல் கல்லூரியில் வளாக வேலைவாய்ப்பு முகாமையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற நோ்காணலில் பல்வேறு நிறுவனங்களில் தோ்வு செய்யப்பட்ட 516 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலா் டி.வி.கே. பாபு தலைமை வகித்தாா். புதுச்சேரி எம்கேடி கல்லூரி வேலைவாய்ப்பு அதிகாரி எம்.ஜெய்குமாா் சிறப்புரையாற்றி பணிநியமன ஆணைகளை வழங்கினாா்.
கல்லூரி முதல்வா் ஆா். மாலதி வரவேற்றாா். வேலைவாய்ப்புப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் அபிலேஷ்குமாா் நன்றி கூறினாா்.