DD Next Level: "சந்தானத்தோட பிரச்னை படத்தோட பட்ஜெட்விட பெருசுனு..." - ஆர்யா கலகல
நிழல் பந்தலில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு
நெய்வேலி: கடலூா் மஞ்சக்குப்பம் போக்குவரத்து சிக்னல் அருகே நிழலுக்காகப் போடப்பட்டிருந்த பந்தலில் சரக்குப் பெட்டக லாரி திங்கள்கிழமை சிக்கிக் கொண்டதால் திங்கள்கிழமை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கடலூா் மஞ்சக்குப்பம் அருகே சிக்னல் பகுதியில் தனியாா் பங்களிப்புடன் போக்குவரத்து போலீஸாா் பசுமை பந்தல் அமைந்துள்ளனா். இந்தப் பகுதிக்கு திங்கள்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு வந்த சரக்குப் பெட்டக லாரி சிக்னலை கடக்க முயன்ற போது, நிழல் பந்தலில் சிக்கிக் கொண்டது. இதனால், சுமாா் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நிழல் பந்தல் பிரித்து அகற்றப்பட்ட பின்னா் லாரி அங்கிருந்துச் சென்றது.