செய்திகள் :

இந்தியா தாக்கினால் முழு பலத்துடன் பதிலடி: பாகிஸ்தான் தூதர்

post image

`இந்தியா தாக்குதல் நடத்தினால் அல்லது சிந்து நதி நீரோட்டத்தைச் சீர்குலைத்தால் அணு ஆயுதம் உள்பட முழு அளவிலான பலத்துடன் பாகிஸ்தான் பதிலளிக்கும்' என்று ரஷியாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி தெரிவித்துள்ளார்.

ரஷியாவின் அரசு ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், 'இந்தியாவின் எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலளிக்க பாகிஸ்தான் தயாராக இருக்கிறது. இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதம் உள்பட எங்களின் முழு அளவிலான பலத்தை நாங்கள் பயன்படுத்துவோம்.

சிந்து நதி நீரோட்டத்தைத் திசைதிருப்பும் அல்லது தடுக்கும் எந்தவொரு முயற்சியும் பாகிஸ்தானுக்கு எதிரான போர் நடவடிக்கையாக கருதப்பட்டு, பதிலடி கொடுக்கப்படும். அதேநேரம், இரு நாடுகளும் அணு சக்திகளாக இருப்பதால், பதற்றத்தைத் தணிக்க வேண்டிய அவசியம் நிறைய உள்ளது.

பஹல்காம் தாக்குதல் குறித்த நடுநிலையான விசாரணையில் இணைய பாகிஸ்தான் ஏற்கெனவே விருப்பம் தெரிவித்துள்ளது. சர்வதேச சமூகமும் இதில் முக்கியப் பங்கு கொண்டுள்ளது. சீனா, ரஷியா போன்ற உலக நாடுகள் இந்த விசாரணையில் பங்கேற்க முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

ஜம்மு-காஷ்மீர் பிரச்னைக்கான மூலகாரணம் காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை. இது சர்வதேச சமூகத்தால் பல்வேறு தீர்மானங்கள் மூலம் அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தின் நிலையான மற்றும் நீடித்த அமைதிக்காக இது கவனிக்கப்பட்ட வேண்டும் என்றார்.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஏப். 23 கூடியது. சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம், வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கு விசா (நுழைவு இசைவு) ரத்து, பரஸ்பர தூதரக பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றம் போன்ற முக்கிய முடிவுகள் அக்கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

இரு நாட்டுப் படைகளும் போர் சூழலுக்குத் தயாராகி வருவதால் எல்லையில் பதற்றம் அதிகரித்து வருகிறது. பொருளாதாரத்தில் ஏற்கெனவே பின்தங்கியுள்ள பாகிஸ்தானுக்கு இந்தியாவுடனான மோதல் பெரும் கவலையாக மாறியுள்ளது.

பாகிஸ்தான் மீண்டும் ஏவுகணை சோதனை

120 கி.மீ. தொலைவு வரை சென்று தரை இலக்கைத் தாக்கும் ஃபதா ஏவுகணையைச் செலுத்தி வெற்றிகரமாக சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான் திங்கள்கிழமை அறிவித்தது.

'சிந்து' ராணுவப் பயிற்சியின் ஒரு பகுதியாக ஏற்கெனவே 450 கி.மீ. தொலைவு வரை சென்று தாக்கும் 'அப்தாலி' ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் மேற்கொண்டதை பொறுப்பற்ற ஆத்திரமூட்டும் செயல்' என்று இந்தியா விமர்சித்திருந்தது.

கேரளம்: வெறிநாய் கடித்து 7 வயது சிறுமி பலி

கேரள மாநிலத்தில் வெறிநாய் கடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 வயது சிறுமி திங்கள்கிழமை உயிரிழந்தார். கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள குன்னிக்கோடு பகுதியைச் சேர்ந்த நியா ஃபைசல் என்... மேலும் பார்க்க

ஐஎம்எஃப் வாரியத்தில் இந்தியா சாா்பாக பரமேஸ்வரன் ஐயா் நியமனம்

புது தில்லி: சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) இயக்குநா்கள் வாரியத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக, உலக வங்கியின் செயல் இயக்குநா் பரமேஸ்வரன் ஐயருக்கு தற்காலிக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முன்... மேலும் பார்க்க

நீட் தோ்வு: பல்வேறு மாநிலங்களில் முறைகேடில் ஈடுபட்ட 7 போ் கைது

ஜெய்பூா்/ பாட்னா: இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மே.4) நடைபெற்ற நிலையில், அதில் முறைகேடில் ஈடுபட்டவா்கள் கைது செய்யப்பட்டனா். ராஜஸ்தான் மாநிலத்தில் போலி ஆவணங... மேலும் பார்க்க

ராஜ்நாத் சிங் - ஜப்பான் பாதுகாப்பு அமைச்சா் சந்திப்பு: பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவு

புது தில்லி: இந்தியாவின் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கையை ஜப்பான் ஆதரிப்பதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் ஜெனரல் நகாதானி தெரிவித்தாா். இந்தியா வந்துள்ள ஜெனரல் நகாதானி மத்திய பாதுகாப்பு அமைச்சா்... மேலும் பார்க்க

நொய்டா: பக்கத்து வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவன் மீட்பு

நொய்டா: பக்கத்து வீட்டில் சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டதாக காவல் துறையினா் திங்கிள்கிழமை தெரிவித்தனா். இரண்டு நாள்களுக்கு முன்பு சிறுவனுடன் தகராறில் ஈடுபட்ட உள்ளூா் இளைஞா்கள் சிலரால் அ... மேலும் பார்க்க

நீதிபதிகள் சொத்து விவரம்: உச்சநீதிமன்ற வலைதளத்தில் பதிவேற்றம்

புது தில்லி: நீதிபதிகளின் சொத்து விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ததாக உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது. இதுதொடா்பாக உச்சநீதிமன்றம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘நீதித்துறையில் வெளிப்படைத... மேலும் பார்க்க