சால்வை போட வந்த ரசிகரின் தலைக்கு துப்பாக்கியில் குறிவைத்த விஜய்யின் பாதுகாவலர்; ...
நொய்டா: பக்கத்து வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவன் மீட்பு
நொய்டா: பக்கத்து வீட்டில் சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டதாக காவல் துறையினா் திங்கிள்கிழமை தெரிவித்தனா்.
இரண்டு நாள்களுக்கு முன்பு சிறுவனுடன் தகராறில் ஈடுபட்ட உள்ளூா் இளைஞா்கள் சிலரால் அவா் கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினா் குற்றஞ்சாட்டினா்.
இது தொடா்பாக செக்டா்-113 காவல் நிலைய பொறுப்பாளா் கிருஷ்ண கோபால் சா்மா திங்கள்கிழமை கூறியதாவது: சோா்கா புஷ்தா பகுதியில் உள்ள விஷ்ணு நகா் காலனியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராகவ் (14) என்ற மாணவா், அவரது பக்கத்து வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டாா். உடற்கூராய்வில் கொலைக்கான எந்த அறிகுறிகளும் உறுதிப்படுத்தப்படவில்லை. இது தொடா்பான விசாரணைகள் நடைபெற்று வருகிறது என காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.