செய்திகள் :

இளமையைக் காக்கும் தேங்காய் எண்ணெய்; எப்படிப் பயன்படுத்துவது?

post image

`தேங்காய் எண்ணெய்யா... அது முழுக்க கொலஸ்ட்ரால்ப்பா! சாப்பிடவே கூடாது’ என்ற வதந்தியை யார் கிளப்பிவிட்டது எனத் தெரியவில்லை. தமிழகத்தில் பலரும் நம் பாரம்பரிய தேங்காய் எண்ணெயை உணவில் பயன்படுத்துவதைக் கிட்டத்தட்ட நிறுத்தியேவிட்டனர். 'உண்மையில், தேங்காய் எண்ணெய் உடல்நலத்துக்குக் கெடுதியா?' என்று மருத்துவர்களிடம் கேட்டால், 'இல்லை' என்கின்றனர். தேங்காய் எண்ணெயை சமையலில் சேர்த்துக்கொள்வதிலும், வெளிப்புறமாகத் தோலில் பூசுவதாலும் பல பலன்கள் இருக்கின்றன. உடலுக்கு நலம் தருவதோடு, சருமத்தைப் பொலிவாக்கும் ஆற்றல் கொண்டது தேங்காய். இதுபற்றி விளக்கமாக சொல்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ரேச்சல் ரெபேக்கா.

தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய்

*தேங்காயில் 90 சதவிகிதம் சாச்சுரேட்டட் வகை கொழுப்பு இருக்கிறது. இது உடலுக்குப் பல்வேறு நற்பலன்களைத் தருகிறது.

*தேங்காய் எண்ணெயை முகத்திலும் லேசாகத் தேய்த்துவந்தால், முகப்பருக்கள் வருவது தடுக்கப்படும். முதுமையானவர்களுக்கு இருக்கும் தோல் சுருக்கம் (Wrinkles) தற்போது, பலருக்கு இளம் வயதிலேயே வந்துவிடுகிறது. தோல் சுருக்கத்துக்குச் செயற்கையாக தயாரிக்கப்பட்ட கிரீம்களைப் பயன்படுத்துவதைவிட, தேங்காய் எண்ணெயை முகத்தில் தேய்த்துவந்தாலே சுருக்கங்கள் வருவது தடுக்கப்படும்.

தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய்

*தேங்காய் எண்ணெயை தினமும் சமையலில் ஏதாவது ஒரு வகையில் சேர்க்க வேண்டும். ஆனால், டீப் ஃபிரை மற்றும் துரித உணவுகளில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் எந்தப் பலனும் இருக்காது. நம் வழக்கமான சமையலில், சாம்பார், கூட்டு, கீரை, பொரியல் என ஏதோ ஒரு வகையில் தினமும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.

*அதீத வெப்பம் காரணமாக, சருமத்தில் கறுப்புத் திட்டுகள் அதிகமாக உருவாகும். தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால், இது தடுக்கப்படும். இயற்கையாகக் கிடைக்கக்கூடிய, அனைவரும் பயன்படுத்தக்கூடிய, எந்தவிதப் பக்கவிளைவுகளும் இல்லாத சன் ஸ்க்ரீன், தேங்காய் எண்ணெய்.

தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய்

*தேங்காய் எண்ணெய் மூளை சிறப்பாகச் செயல்பட உதவும். அல்சைமர் போன்ற ஞாபகமறதி பிரச்னைகளைத் தடுக்கும். தைராய்டு பிரச்னை, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றையும் தடுக்கும்.

*தோலில் ஏற்பட்டுள்ள தழும்புகள் மறைய, தேங்காய் எண்ணெய் துணைபுரிகிறது. கை, கால் மூட்டுகளில் பலருக்கும் கறுப்பு நிறத்தில் அடர்ந்தத் திட்டுகள் இருக்கும். இவர்கள், தொடர்ந்து தேங்காய் எண்ணெயை அந்தப் பகுதியில் பயன்படுத்திவந்தால், பிரச்னை சரியாகும். இது ஆன்டிபாக்டீரியா தன்மை கொண்டிருப்பதால், கிருமித்தொற்றைத் தவிர்த்து, சிராய்ப்புக் காயங்களை ஆற்றும்.

ஆயுர்வேத மருத்துவர் ரேச்சல் ரெபேக்கா
ஆயுர்வேத மருத்துவர் ரேச்சல் ரெபேக்கா

*தேங்காய் எண்ணெயில் உள்ள நல்ல கொழுப்பு, பெண்களின் அடி வயிற்றைச் சுற்றி சேரும் கொழுப்புகளைக் கரைக்க உதவும். தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்பட்ட உணவுகளைச் சாப்பிட்ட பிறகு, வெந்நீர், மோர் போன்றவற்றைக் குடிக்கலாம். பகல் தூக்கம் கூடாது. ஐஸ்கிரீம் சாப்பிடுவது, குளிர்ந்த நீர், குளிர்பானம் அருந்துவது தவிர்க்க வேண்டும்.

*தேங்காய் எண்ணெயில் இருக்கும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் காரணமாக, தலைமுடியிடையில் பாக்டீரியா வளர்வது தடுக்கப்படுகிறது.

தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய்

*உலர் சருமம் மற்றும் வலுக் குறைந்த தலைமுடி கொண்டவர்கள், தலைமுடி உதிரும் பிரச்னை இருப்பவர்கள் இரவு படுக்கும்போதே தலைக்கு எண்ணெய் தேய்த்துவிட்டுப் படுக்க வேண்டும். காலையில் எழுந்து தலைக்குக் குளிக்க வேண்டும்.

*தேங்காய் எண்ணெயை லேசாக சூடுபடுத்தி வாய் கொப்பளித்துவந்தால், வாய் துர்நாற்றம் நீங்கும். பற்கள், தாடைகளில் இருக்கும் கிருமிகள் அழியும்.

Health: வெப்பத்தால் வரும் நோய்களை குணமாக்கும் பனங்கற்கண்டு!

பனைமரத்தில் இருந்து பெறப்படும் பதநீரைப் பதமாகக் காய்ச்சித் தயாரிக்கப்படுவதே பனங்கற்கண்டு. இதில், நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன. அதுபற்றி சொல்கிறார் இயற்கை மருத்துவர் எட்வர்டு பெரியநாயகம்.பனங்கற்கண்ட... மேலும் பார்க்க

Summer: வெயிலை நாம் ஏன் வெறுக்கிறோம்? காரணம் சொல்லும் நிபுணர்!

வெயிலில் செல்ல நாம் ஏன் இவ்வளவு தயங்குகிறோம்? இதற்கு உளவியல் ரீதியாக அளிக்கப்படும் முதல் பதில் வியர்வை மற்றும் அதனால் உருவாகும் துர்நாற்றம், அரிப்பு மற்றும் சருமப் பிரச்னைகள். நம்மில் பெரும்பாலானோர் ச... மேலும் பார்க்க

Doctor Vikatan: சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே பசி, அதிகம் சாப்பிடுகிறேனோ என்ற பயம்.. தீர்வு என்ன?

Doctor Vikatan: என் வயது 45. தினமும் காலை உணவைத் தவிர்ப்பதில்லை. ஆனாலும், அடுத்த இரண்டு மணி நேரத்தில் பசிக்கிறது. எனவே, காபி, டீயுடன் பிஸ்கட், வடை என ஏதேனும் சாப்பிடுகிறேன். அதேபோலமதிய உணவு சாப்பிட்டு... மேலும் பார்க்க

Health: சிறுநீர் கழிப்பதைத் தள்ளிப்போடுகிறீர்களா? என்னவெல்லாம் பாதிப்புகள் வரும் தெரியுமா?

சரியான நேரத்துக்குச் சாப்பிடாமல் ஒத்திவைப்பது, தூங்காமல் இருப்பது பற்றிப் பார்த்திருக்கிறோம். சிறுநீர் கழித்தலை ஒத்திப்போடுகிறவர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?இன்றைக்கு நகர்ப்புறங்களில் பொது ... மேலும் பார்க்க

Mayonnaise: `மையோனைஸை விற்க, வாங்க, சேமித்து வைக்க தடை...' - தமிழ்நாடு அரசு சொல்வது என்ன?

இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் வெளிநாட்டு உணவுகள் மிகவும் விரும்பப்படுகிறது. குறிப்பாக தந்தூரி, பார்பிகியூ, சவர்மா எனப் பல்வேறு அரேபிய உணவுகளுக்கான கடைகள் வீதிகள்தோறும் இருக்கிறது. இந்த உண... மேலும் பார்க்க

Health: 20களில் கருத்தரித்தால்தான் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்குமா? மருத்துவர் சொல்வது என்ன?

உயர் கல்வி, வேலையில் அடுத்தகட்ட வளர்ச்சி, ஆன்சைட் என இந்தக் காலப் பெண்கள் தங்கள் கரியர் மீது மிகுந்த காதலுடன் இருக்கிறார்கள்.அதே காலகட்டத்தில் திருமணம், குழந்தை எனத் திட்டமிட்டால் அது தங்கள் கரியரில் ... மேலும் பார்க்க