செய்திகள் :

ஈரைப் பேனாக்கி, பேனைப் பேயாகக் காட்ட நினைக்கிறார்கள்: முதல்வர் ஸ்டாலின்

post image

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமைக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கட்சித் தொண்டர்களுக்கு ‘உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பில் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் தெரிவித்திருப்பதாவது:

“இந்தியாவின் பிற மாநிலங்களும் கொள்கைரீதியாக நமக்கு என்றும் எதிரானவர்கள் ஆள்கின்ற மாநிலங்களும்கூட திராவிட மாடல் அரசின் திட்டங்களைப் பின்பற்றும் வகையில் முன்னோடியான அரசாக, முதன்மையான அரசாகத் தமிழ்நாட்டை இந்த நான்காண்டுகளில் உயர்த்தியிருக்கிறோம். நலன் தரும் திட்டங்கள், நாடு போற்றும் சாதனைகளுடன் ஐந்தாவது ஆண்டில் திராவிட மாடல் அரசு பெருமிதத்துடன்  அடியெடுத்து வைக்கிறது. அடுத்த ஐந்தாண்டுகளும் இந்த நல்லாட்சி தொடரும் என்பதைத் தமிழ்நாட்டு மக்களின் மனநிலை காட்டுகிறது.

6 முறை ஆட்சி செய்யக் கிடைத்த வாய்ப்புகளில் தமிழ்நாட்டின் சமூக - பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்து, ஒவ்வொரு குடும்பமும் பயன் பெறும் வகையிலான திட்டங்களை நிறைவேற்றி, நவீனத் தமிழ்நாட்டைக் கட்டமைத்தது திமுக அரசு. ஏழாவது முறையாக 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியமைக்கப் போவதும் திராவிட முன்னேற்றக் கழகம்தான்.

மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை உறுதி செய்திடக் களத்தில் கடுமையாக உழைத்திட வேண்டும். அரசியல் எதிரிகளால் நமது ஆட்சியைக் குறை சொல்ல முடியாத காரணத்தால் அவதூறு சேற்றை வீசுகிறார்கள். ஈரைப் பேனாக்கி, பேனைப் பேயாகக் காட்ட நினைக்கிறார்கள். அதிகார அமைப்புகளை ஏவி அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். இந்தப் பூச்சாண்டிகளுக்கு மிரள்வதற்கு அடிமைக் கட்சியல்ல, நம் தி.மு.க. இது சுயமரியாதை இயக்கம். தன்மானமும் தைரியமும் கொண்ட இயக்கம். தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கும் இயக்கம். இந்தியாவுக்கு வழிகாட்டும் இயக்கம்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த 505 வாக்குறுதிகளில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படாத சாதனைத் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு, மக்களுக்குப் பயனளித்து வருகின்றன. இன்னும் நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளும் இருப்பதை நான் மறக்கவுமில்லை, மறுக்கவுமில்லை. அவற்றையும் நிறைவேற்றிட வேண்டும் என்பதில் உறுதியாகவே இருக்கிறேன்.

கட்சிப் பேச்சாளர்கள் அவரவருக்குரிய பாணியில் நல்ல முறையில் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும். நம்மை எதிர்ப்பவர்கள் தங்கள் மேடைகளில் பொய்யாக – மோசமாக – ஆபாசமாக - அருவருப்பாகப் பேசினாலும், நமது பேச்சாளர்கள் கண்ணியக்குறைவான சொற்களைப் பயன்படுத்திடக் கூடாது என்பதை அறிவுறுத்தலாகவும் கட்டளையாகவும் தெரிவிக்கிறேன்.

ஒரு மணி நேரப்  பேச்சைவிட, ஒரு நிமிட - அரை நிமிடக் காணொலிகள், ரீல்ஸ்கள்தான் இலட்சக்கணக்கானவர்களிடம் உடனடியாகப் போய்ச் சேர்கின்றன.

சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துத் தமிழ்நாட்டுக்கு துரோகமிழைப்பவர்களும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளும் தி.மு.க.வை வீழ்த்திவிட முடியாதா எனத் தொடர் தோல்வியின் ஆற்றாமையில் தவிக்கிறார்கள். அவர்களின் மனக்கணக்கு தப்புக்கணக்காகவே முடியும் என்பதைச் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் போடுகிற கணக்கு தீர்மானிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்த தங்கம்!

சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் தங்கம் இரண்டாவது முறையாக அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கம் கண்டுவந்த நிலையில், இன்று காலை வர... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணி சரிவைச் சந்திக்குமே தவிர, வளராது: தொல். திருமாவளவன்

சிதம்பரம்: அதிமுக - பாஜக கூட்டணி சரிவைச் சந்திக்குமே தவிர, வளராது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மா... மேலும் பார்க்க

மு.க. ஸ்டாலினின் ஆட்சிக்கு சவக்குழிக்குச் சென்ற சட்டம் - ஒழுங்கே சாட்சி! - இபிஎஸ் கடும் விமரிசனம்!

முதல்வர் ஸ்டாலினின் 4 ஆண்டு கால ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமரிசித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தொடர் கொலைகள்- ஜாதிய மோ... மேலும் பார்க்க

ஊடகத்துறையினருடன் சந்திப்பு.. தயங்காமல் விமர்சியுங்கள், பாராட்டுங்கள் - முதல்வர் ஸ்டாலின்

சென்னை: பாராட்ட வேண்டியதை பாராட்டினால் தான், விமர்சனத்திற்கான மரியாதையும் மதிப்பும் கிடைக்கும்! எனவே, தயங்காமல் விமர்சிப்பது போன்று, தயங்காமல் பாராட்டுங்கள் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார... மேலும் பார்க்க

12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளை எப்படி அறியலாம்?

தமிழகத்தில் மே 8ஆம் தேதி பனிரெண்டாம் பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.தமிழகத்தில் மே 9ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் எ... மேலும் பார்க்க

அடகுக் கடையில் 250 சவரன் நகை, 8 கிலோ வெள்ளி திருட்டு!

அரியலூர்: அரியலூரில் அடகுக் கடையில் 250 சவரன் தங்க நகைகள், 8 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற ராஜஸ்தானைச் சேர்ந்த பணியாளரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.ராஜஸ்தா... மேலும் பார்க்க