உ.பி., கிராமத்தின் 78 வருடத் தவிப்பு; சோலார் விளக்கின் ஒளியில் கனவை நனவாக்கிய 10...
வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்!
1. கீழ்க்காண்பவற்றில் எந்த ஒன்று, உலக அளவில், வெள்ளம் வறட்சி என்ற வடிவங்களில், புவித் தட்பவெப்ப முறைகளில் பாதகமான மாற்றங்களை ஏற்படுத்தி, இயற்கைப் பேரழிவுகள் நிகழக்காரணமாக இருக்கிறது?
(A) கரியமில வாயு
(C) வெப்பமண்டல சூறாவளி
(B) எல் - நினோ
(D) இட்டாய்– இட்டாய்
(E) விடை தெரியவில்லை
2. PM கதிசக்தி என்பது பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான மாற்று அணுகுமுறையாகும். இது ........இல் கவனம் செலுத்துகிறது
(A) கல்வி வளர்ச்சி
(B) பன்முக இணைவு
(C) SHGs-ன் அதிகாரம்
(D) சுற்றுப்புற சூழ்நிலை வளர்ச்சி
(E) விடை தெரியவில்லை
3. கீழ்காண்பவற்றுள் எது 'பேட்டி பச்சோ, பேட்டி பத்தோ' எனும் ஒன்றிய அரசின் திட்டத்தின் நோக்கம் கிடையாது?
(i) பாலின அடிப்படையிலான தேர்வு நீக்கத்தினைத் தடை செய்தல்
(ii) பெண்குழந்தைகளின் வாழ்வு மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்தல்
(iii) பெண்குழந்தைகளின் கல்வி மற்றும் பங்கேற்பினை உறுதி செய்தல்
(iv) சம்பந்தப்பட்ட பெண் குழந்தையின் பெயரில் நிரந்தர வைப்புத் தொகையை ஏற்படுத்துதல்
(A) (i) மட்டும்
(B) (i) மற்றும் (ii)
(C) (ii ) மட்டும்
(D) (iv) மட்டும்
(E) விடை தெரியவில்லை
4. கீழே கொடுக்கப்பட்டுள்ள உயர் பதவி அலுவலர்களின் பட்டியலைக் கவனித்து அவர்கள் பதவியின் அடிப்படையிலான முன்உரிமைப் படிநிலைப் பட்டியலைக் கண்டறிக.
(i) இந்திய தலைமை தேர்தல் ஆணையர்
(ii) மத்திய அமைச்சரவைச் செயலர்
(iii) தலைமை இராணுவ அதிகாரி
(iv) மக்களவை துணைத் தலைவர்
(A) (iv), (iii),(i) மற்றும் (ii)
(B) (iv), (iii), (ii) மற்றும் (i)
(C) (i), (iv), (ii) மற்றும் (iii)
(D) (i), (iii), (iv) மற்றும் (ii)
(E) விடை தெரியவில்லை
5. சூரிய ஆற்றல் பயன்பாடுகளில் பொதுவாக உள்ள சவால்களை தீர்ப்பது குறித்து கூட்டாக விவாதிக்க உருவான - சூரிய வளம் மிகுந்த நாடுகளின் கூட்டமைப்பு எது?
(A) சர்வதேச சூரிய ஆற்றல் சமூகம் (ISES)
(B) சர்வதேச சூரிய சக்தி கூட்டணி (ISA)
(C) சர்வதேச புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முகமை (IRENA)
(D) சர்வதேச ஆற்றல் முகமை (IEA)
(E) விடை தெரியவில்லை
6. ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பின்வரும் இந்திய மகளிரை காலவரிசைப்படி முறைப்படுத்தவும்
1. சாய்னா நேவால்
2. லவ்லீனா பொர்கோகைன்
3. சாக்ஷி மாலிக்
4. கர்ணம் மல்லேஸ்வரி
(A) 2, 4, 1, 3
(B) 1, 4, 2, 3
(C) 4, 1, 3, 2
(D) 4, 1, 2, 3
(E) விடை தெரியவில்லை
7. காமன் வெல்த் 2022 விளையாட்டில் பதக்கம் வென்றவர்களை அவர்களது விளையாட்டுடன் பொருத்துக.
விளையாட்டு வீரர் விளையாட்டு
(a) சரத் கமல் 1. குத்து சண்டை
(b) லக்ஸியா சென் 2. பளுதூக்குதல்
(c) மீராபாய் சானு 3. மேஜை பந்து
(d) நிகாத் ஷரின் 4. பூ பந்து
(a) (b) (c) (d)
(A) 1 2 3 4
(B) 3 4 2 1
(C) 4 2 1 3
(D) 2 3 4 1
(E) விடை தெரியவில்லை
8. பின்வருவனவற்றில் எந்த ஒரு குறிகாட்டி மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டைக் கணக்கிட பயன்படுத்தப்படுவதில்லை?
(A) வாழ்நாள் கால அளவு
(B) நுகர்வோர் விலை குறியீடு
(C) கல்வி குறியீடு
(D) தனிநபர் வருமானம்
(E) விடை தெரியவில்லை
9. எது சரியானது?
(i) HYV - அதிக விளைச்சல் தரும் வகைகள்
(ii) MSP – அதிகபட்ச ஆதரவு விலை
(iii) PDS -பொது விநியோக முறை
(iv) IPM -ஒருங்கிணைந்த பூச்சிக்கொல்லி மேலாண்மை
(A) (i), (ii) மற்றும் (iv) மட்டும்
(B) (i) மற்றும் (iii) மட்டும்
(C) (i), (ii) மற்றும் (iii) மட்டும்
(D) (i), (iii) மற்றும் (iv) மட்டும்
(E) விடை தெரியவில்லை
10. இந்திய அரசின் பின்வரும் திட்டங்களுள் துப்புரவு தொழிலாளர்களின் பாதுகாப்பையும், மதிப்பையும் உறுதி செய்வது எது?
(A) ஸ்மைல்
(B) நமஸ்தே
(C) அம்பர்
(D) வெஸ்ட்
(E) விடை தெரியவில்லை
11. எந்த காலகட்டத்தில் நான்கு கைகளுடன் கூடிய நடராஜரின் வெண்கலச் சின்னங்கள் வார்க்கப்பட்டன?
(A) சேரர் காலம்
(B) சோழர் காலம்
(C) பாண்டியர் காலம்
(D) சுங்க காலம்
(E) விடை தெரியவில்லை
12. பின்வரும் சட்டங்களை அதனோடு தொடர்புடைய ஆண்டுகளோடு பொருத்துக.
(a) மத்ராஸ் வன யானைகள் பாதுகாப்புச்சட்டம் 1. 1882
(b) தமிழ்நாடு வனச் சட்டம் 2. 1980
(C) வனபாதுகாப்புச் சட்டம் 3. 1972
(d ) வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 4. 1873
(a) (b) (c) (d)
(A) 1 4 3 2
(B) 4 1 2 3
(C) 2 3 1 4
(D) 3 2 4 1
(E) விடை தெரியவில்லை
13. டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டியைப் பொறுத்தவரை பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானது?
1. இந்தியாவில் மருத்துவத்தில் பட்டம் பெற்ற முதல் பெண் ஆவார்.
2. பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் சட்டமன்ற உறுப்பினராவார்.
3. மகாராஜ கல்லூரியில் சேர்ந்த முதல் பெண் மாணவியாவார்.
4. சட்ட சபையின் முதல் பெண் தலைவராவார்.
(A) 1, 2 மற்றும் 3
(B) 2, 3 மற்றும் 4
(C) 1, 3 மற்றும் 4
(D) 1, 2, 3 மற்றும் 4
(E) விடை தெரியவில்லை
14. தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் (சட்ட திருத்த மசோதா) சட்டம் 2016ன் சிறப்பம்சம்
(A) மூன்றடுக்கு முறையில் மாற்றப்பட்டது.
(B) மாவட்ட திட்டக் குழுக்களை அமைத்தது
(C) குறிப்பிட்ட அதிகாரங்களை மாநில அரசிலிருந்து பஞ்சாயத்துகளுக்கு மாற்றப்பட்டது
(D) 50 சதவிகித இட ஒதுக்கீடு பெண்களுக்கு கொடுக்கப்பட்டது
(E) விடைதெரியவில்லை
15. ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஆரம்பகால எதிர்ப்பின்போது திருச்சிராப்பள்ளி பிரகடனத்தை வெளியிட்டவர் யார்?
(A) வீரபாண்டிய கட்டபொம்மன்
(B) வேலு நாச்சியார்
(C) மருது சகோதரர்கள்
(D) புலித் தேவர்
(E ) விடை தெரியவில்லை
16. பொருத்துக:
பெயர் தொடர்புடையது
(a) சுவாமி சகஜாநந்தா 1. அப்ரஸ்டு ஹின்டுஸ்
(b) M.C.ராஜா 2. தமிழன்
(c) பண்டிட் அயோத்திதாசர் 3.நந்தனார் கல்விக் கழகம்
(d) வீரேசலிங்கம் 4. விதவை இல்லம்
(a) (b) (c) (d)
(A) 3 1 2 4
(B) 1 3 2 4
(C) 1 2 3 4
(D) 4 1 2 3
(E) விடை தெரியவில்லை
17. காந்தியடிகள் சபர்மதி என்னும் இடத்தில் ஒரு ஆசிரமம் உருவாக்கினார். அதே போல் இராஜாஜி தமிழகத்தில் ஒரு ஆசிரமம் உருவாக்கினார். எங்கே அதை உருவாக்கினார்?
(A) மதுரை
(B) வேதாரண்யம்
(C) சேலம்
(D) திருச்செங்கோடு
(E) விடை தெரியவில்லை
18. பின்வருவனவற்றுள் இராமலிங்க அடிகள் பற்றிய உண்மையான கூற்று எது?
(i) இராமலிங்க அடிகள் சமரச சுத்த சன்மார்க்க சத்ய சங்கத்தை 1865-ல் ஆரம்பித்தார்
(ii) இராமலிங்க அடிகள் ஜாதிய முறைக்கு எதிரானவர்
(iii) இராமலிங்க அடிகள் 1867-ல் சத்ய தர்ம சாலையை நிறுவினார்
(A) (i) மட்டும் உண்மையானது
(B) (i) மற்றும் (iii) மட்டும் உண்மையானது
(C) (i) , (ii) மற்றும் (iii) உண்மையானது
(D) (i) மற்றும் (ii) மட்டும் உண்மையானது
(E) விடை தெரியவில்லை
19. பொருந்தா இணையைக் கண்டறிக
(A) பிரதாப முதலியார் சரித்திரம் - வேதநாயகம் பிள்ளை
(B) சுகுணசுந்தரி - நடேச சாஸ்திரி
(C) கமலாம்பாள் சரித்திரம் - ராஜம் அய்யர்
(D) பத்மாவதி சரித்திரம் - மாதவையா
(E) விடை தெரியவில்லை
20. ஈரோட்டில் 1921-ம் ஆண்டு ஈ.வே.ரா தமிழ்நாட்டில் கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடத்தினார். அப்போது இரண்டு பெண்கள் அவருடன் சேர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்விரு பெண்கள்தான் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக முதன் முதலில் கைது செய்யப்பட்டவர்கள். அவர்கள் யார்?
(A) நாகம்மையார் மற்றும் கண்ணம்மாள்
(B) நாகம்மையார் மற்றும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
(C) கண்ணம்மாள் மற்றும் முத்துலட்சுமி ரெட்டி
(D) மணியம்மையார் மற்றும் நாகம்மையார்
(E) விடை தெரியவில்லை
21. சரியாகப் பொருத்தப்பட்ட ஜோடிகளைத் தேர்ந்தெடுக்கவும்.
1. நிழல்தாங்கல்கள் - வைகுண்ட சுவாமிகள்
2. இந்து முற்போக்கு முன்னேற்ற சங்கம் - ராஜாராம் மோகன் ராய்
3. சமரச சன்மார்க்க சங்கம் - வள்ளலார்
4. சுயமரியாதை அறம் - வேதநாயகம் பிள்ளை
(A) 1 மற்றும் 3
(B) 1 மற்றும் 2
(C) 1 மட்டும்
(D) 1, 2மற்றும் 4
(E) விடை தெரியவில்லை
22. கீழ்க்காணும் பொருளுக்குரிய திருக்குறளை தெரிவு செய்க.
சிறிய காரியங்களிலே முயன்று வெற்றி பெறுவதை விட பெரிய காரியங்களிலே முயன்று தோல்வி அடைவது சிறப்பு
(A) கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது
(B) ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை
(C) கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்
(D) உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து
(E) விடை தெரியவில்லை
23. பட்டியல் I இல் உள்ள நூல்களைப் பட்டியல் II-இல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
பட்டியல் I பட்டியல் II
(a ) உலகம் சுற்றும் தமிழன் 1. தேசியக் கவி
(b) ஞானரதம் 2. சுவாமிநாதன்
(C) தண்ணீர் தண்ணீர் 3. வெ.இராமலிங்கம்
(d) என்கதை 4. ஏ. கருப்பன்
(a) (b) (c) (d)
(A) 1 2 3 4
(B) 2 1 3 4
(C) 3 4 2 1
(D) 4 1 2 3
(E ) விடை தெரியவில்லை
24. 'மாரிவறம் கூறின் மன்னுயிர்இல்லை
மன்னுயிர் எல்லாம் மண்ணாள் வேந்தன் - என யார்? யாருக்கு உரைத்தது?
(A) மணிமேகலா தெய்வம் உதயகுமரனுக்கு
(B) சுதமதி உதயகுமரனுக்கு
(C) தீவதிலகை மணிமேகலைக்கு
(D) மணிமேகலை உதயகுமரனுக்கு
(E) விடை தெரியவில்லை
25. "ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டு” எனச் சாவு உணர்த்தும் நிலையாமையை எடுத்துக் கூறியவர் யார்?
(A) அப்பர்
(B) திருமூலர்
(C) சுந்தரர்
(D) மாணிக்கவாசகர்
(E) விடை தெரியவில்லை
விடைகள்
1. (B) எல் - நினோ
2. (B) பன்முக இணைவு
3. (D) (iv) மட்டும்
4. (C) (i), (iv), (ii) மற்றும் (iii)
5. (B) சர்வதேச சூரிய சக்தி கூட்டணி (ISA)
6. (C) 4, 1, 3, 2
7. (B) 3 4 2 1
8. (B) நுகர்வோர் விலை குறியீடு
9. (B) (i) மற்றும் (iii) மட்டும்
10. (B) நமஸ்தே
11. (B) சோழர் காலம்
12. (B) 4 1 2 3
13. (B) 2, 3 மற்றும் 4
14. (D) 50 சதவிகித இட ஒதுக்கீடு பெண்களுக்கு கொடுக்கப்பட்டது
15. (C) மருது சகோதரர்கள்
16. (A) 3 1 2 4
17. (D) திருச்செங்கோடு
18. (C) (i) , (ii) மற்றும் (iii) உண்மையானது
19. (B) சுகுணசுந்தரி - நடேச சாஸ்திரி
20. (A) நாகம்மையார் மற்றும் கண்ணம்மாள்
21. (A) 1 மற்றும் 3
22. (A) கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது
23. (D) 4 1 2 3
24. (A) மணிமேகலா தெய்வம் உதயகுமரனுக்கு
25. (B) திருமூலர்