மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது: என்சிஇஆா்டி கூட்டத்தில் தமிழக அரசு
வினா - விடை வங்கி.... பாளையக்காரர்கள் புரட்சி!
1. பாளையக்காரர்களை ஆங்கிலேயர்கள் எவ்வாறு அழைத்தனர்?
(a) பாளையம்
(b) சேவகர்கள்
(c) போலிகார்
(d) இவற்றில் எதுவுமில்லை
2. பாளையக்காரர் முறையை முதன் முதலில் அறிமுகப்படுத்திய அரசு?
(a) காகதீய அரசு
(b) விஜயநகர அரசு
(c) மாம்லுக் அரசு
(d) சோழ அரசு
3. பாளையக்காரர் முறை யாருடைய ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?
(a) பூலித்தேவர்
(b) பிராதப ருத்ரன்
(c) வேலுநாச்சியார்
(d) கோபால நாயக்கர்
4. மதுரை நாயக்கராக விஸ்நாத நாயக்கர் பதவியேற்ற ஆண்டு?
(a) 1529
(b) 1530
(c) 1531
(d) 1532
5. தமிழகத்தில் பாளையக்காரர் முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
(a) பூலித்தேவர்
(b) மருது சகோதரர்கள்
(c) தீரன் சின்னமலை
(d) விஸ்வநாத நாயக்கர்
6. யாருடைய உதவியோடு விஸ்வநாத நாயக்கர் பாளையக்காரர் முறையை அறிமுகப்படுத்தினார்?
(a) பூலித்தேவர்
(b) ஹைதர் அலி
(c) அரியநாதர்
(d) சின்ன மருது
7. பாளையக்காரர்கள் குறித்து பின்வருவனவற்றுள் சரியானவை எவை?
1. பாளையம் என்பது ஒரு பகுதியையோ அல்லது இராணுவ முகாமையோ அல்லது சிற்றரசையோ குறிப்பதாகும்
2. வரிவசூல் செய்வதிலும், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதிலும் பாளையக்காரர்கள் தன்னிச்சையாக செயல்பட்டனர்
(a) 1 மட்டும் சரி
(b) 2 மட்டும் சரி
(c) 1 ,2 தவறு
(d) 1, 2 சரி
8. நாயக்க மன்னர்கள் உருவாக்கிய பாளையங்களின் எண்ணிக்கை?
(a) 70
(b) 72
(c) 75
(d) 78
9. பாளையக்காரர்கள் புரட்சி நடைபெற்ற காலம்?
(a) 1755 - 1801
(b) 1760 - 1800
(c) 1765 - 1802
(d) இவற்றில் எதுவுமில்லை
10.பூலித்தேவர் புரட்சியில் ஈடுபட்ட காலம்?
(a) 1750 - 1755
(b) 1760 - 1764
(c) 1760 - 1765
(d) 1755 - 1767
11. கிழக்கிந்திய கம்பெனிக்கு கப்பம் கட்ட மறுத்த பூலித்தேவரை அடக்க அனுப்பப்பட்டவர் யார்?
(a) கர்னல் ஹெரான்
(b) வில்லியம் பெண்டிங்
(c) சர் ஜான் மார்ஷல்
(d) வில்லியம் ஹாக்கிங்ஸ்
12. ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட பாளையக்காரர் கூட்டமைப்பை உருவாக்கியவர் யார்?
(a) கட்டபொம்மன்
(b) சின்ன மருது
(c) ஒண்டி வீரன்
(d) பூலித்தேவர்
13. பின்வருவனவற்றுள் சரியானவை எவை?
1. ஆங்கிலேயரை எதிர்க்க பாளையக்காரர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது
2. அனைத்துப் பாளையங்களும் ஆங்கிலேயரை எதிர்த்தனர்
(a) 1 சரி
(b) 2 சரி
(c) 1, 2 சரி
(d) 1, 2 தவறு
14. ஆங்கிலேயரை எதிர்க்க பூலித்தேவர் யாரிடம் உதவியை நாடினார்?
(a) ஹைதர் அலி மற்றும் ஆங்கிலேயர்கள்
(b) ஹைதர் அலி மற்றும் டச்சுக்காரர்கள்
(c) ஹைதர் அலி மற்றும் பிரெஞ்சுக்காரர்கள்
(d) இவற்றுள் எதுவுமில்லை
15. களக்காடு போர் யாருக்கிடையே நடைபெற்றது?
(a) பூலித்தேவர் - மாபூஸ்கான் இடையே
(b) கட்டபொம்மன் - ஆங்கிலேயர்கள் இடையே
(c) வேலுநாச்சியார் - ஆங்கிலேயர்கள் இடையே
(d) மருது சகோதரகள் - மாபூஸ்கான் இடையே
16. களக்காடு போர் தொடர்பாக பின்வருவனவற்றுள் சரியானைவை எவை?
1. களக்காடு போரில் பூலித்தேவருக்கு யாரிடமிருந்தும் உதவி கிடைக்கவில்லை
2. களக்காடு போரில் பூலித்தேவர் தோற்கடிக்கப்பட்டார்
(a) 1 சரி
(b) 2 சரி
(c) 1, 2 சரி
(d) 1, 2 தவறு
17. கான் சாகிப் என்றும் மருதநாயகம் என்றும் அழைக்கப்பட்டவர் யார்?
(a) சின்ன மருது
(b) பெரிய மருது
(c) யூசுப் கான்
(d) முத்துவடுகநாதர்
18. பூலித்தேவரின் மூன்று முக்கிய கோட்டைகளைக் கைப்பற்றியவர் யார்?
(a) யூசுப் கான்
(b) கர்னல் ஹெரான்
(c) கர்னல் கில்லஸ்பி
(d) வில்லியம் பெண்டிக்
19. பூலித்தேவர் அவரது மூன்று முக்கிய கோட்டைகளை இழந்த ஆண்டு?
(a) மே 10, 1761
(b) மே 12, 1761
(c) மே 15, 1761
(d) மே 16, 1761
20. யூசுப் கான் தூக்கிலிடப்படக் காரணம் என்ன?
(a) போரில் ஏற்பட்ட தோல்வி
(b) கம்பெனி நிர்வாகத்துக்கு நம்பிக்கை துரோகம்
(c) கம்பெனி பணத்தை அளவுக்கு அதிகமாக வீணாக்கியது
(d) மேற்கூறிய எதுவும் இல்லை
21. பூலித்தேவர் நெற்கட்டும்செவலை மீண்டும் கைப்பற்றிய ஆண்டு?
(a) 1761
(b) 1762
(c) 1764
(d) 1765
22. பூலித்தேவரை தோற்கடித்த ஆங்கிலேய படைத்தளபதி யார்?
(a) கேப்டன் கேம்ப்பெல்
(b) கேப்டன் கில்லஸ்பி
(c) சர் ஜெனரல் டயர்
(d) சர் தாமஸ் ரோ
23. பூலித்தேவர் தோற்கடிக்கப்பட்ட ஆண்டு?
(a) 1764
(b) 1765
(c) 1766
(d) 1767
24. வேலுநாச்சியார் எந்த அரசரின் மகள்?
(a) சிவகங்கை அரசர்
(b) இராமநாதபுரம் அரசர்
(c) புதுக்கோட்டை அரசர்
(d) சிவகிரி அரசர்
25. வேலுநாச்சியார் எத்தனை வயதில் மணம் புரிந்து கொண்டார்?
(a) 12 வயதில்
(b) 13 வயதில்
(c) 14 வயதில்
(d) 16 வயதில்
விடைகள்
1. (c) போலிகார்
2. (a) காகதீய அரசு
3. (b) பிராதப ருத்ரன்
4. (a) 1529
5. (d) விஸ்வநாத நாயக்கர்
6. (c) அரியநாதர்
7. (d) 1, 2 சரி
8. (b) 72
9. (a) 1755 - 1801
10. (d) 1755 - 1767
11. (a) கர்னல் ஹெரான்
12. (d) பூலித்தேவர்
13. (a) 1 சரி
14. (c) ஹைதர் அலி மற்றும் பிரெஞ்சுக்காரர்கள்
15. (a) பூலித்தேவர் - மாபூஸ்கான் இடையே
16. (d) 1, 2 தவறு
17. (c) யூசுப் கான்
18. (a) யூசுப் கான்
19. (d) மே 16, 1761
20. (b) கம்பெனி நிர்வாகத்துக்கு நம்பிக்கை துரோகம்
21. (c) 1764
22. (a) கேப்டன் கேம்ப்பெல்
23. (d) 1767
24. (b) இராமநாதபுரம் அரசர்
25. (d) 16 வயதில்