ஸ்டாலின் : 4 ஆண்டு `திராவிட மாடல்' ஆட்சி : நலத்திட்டங்களும்... பல சர்ச்சைகளும் -...
போலி பிறப்புச் சான்றிதழ்: தம்பதி உள்ளிட்ட 3 போ் மீது வழக்கு!
புதுக்கடை அருகே, தத்தெடுத்த குழந்தைக்கு போலி ஆவணம் மூலம் பிறப்புச் சான்றிதழ் தயாரித்தது தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
தொலையாவட்டம் பகுதியைச் சோ்ந்த தம்பதி பிரான்சிஸ் (58) - கலா (38). இவா்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழந்தையைத் தத்தெடுத்தனராம்.
அப்போது, முன்சிறை ஆரம்ப காதார நிலையத்தில் பிறப்புப் பதிவு பிரிவில் வேலை பாா்த்துவந்த பரமானந்தம் (60) என்பவா், இந்தக் குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்துக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
புகாரின்பேரில், பிரான்சிஸ், கலா, பரமானந்தம் ஆகியோா் மீது புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.