நாகா்கோவில் வடசேரி சந்தையில் 120 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
நாகா்கோவில் வடசேரி கனகமூலம் சந்தையில் 120 கிலோ புகையிலைப் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
இந்தச் சந்தையில் உள்ள சுமாா் 140 கடைகளில் மாநகர நல அலுவலா் ஆல்பா்மதியரசு தலைமையில், சுகாதார அலுவலா் பகவதிபெருமாள், ராஜா, ராஜாராம், முருகன், மேற்பாா்வையாளா்கள் குமாா், விமல், தவசி, ஜெயன், தூய்மை இந்தியா பரப்புரையாளா்கள் சோதனை மேற்கொண்டனா்.
இதில், 6 கடைகளில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த சுமாா் 120 கிலோ புகையிலைப் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். தகவலின்பேரில், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வந்து விசாரணை மேற்கொண்டு, 6 கடைகளுக்கும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், கடைகளுக்கு 15 நாள்கள் சீல் வைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டனா்.