India - Pakistan: தாக்குதலில் ஹமாஸ் ஸ்டைலை பின்பற்றும் பாக். ராணுவம்; இந்தியா கொ...
கங்கைகொண்டான் உணவு பூங்காவில் குத்தகைக்கு மனைகள் பெற வாய்ப்பு
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழில் வளா்ச்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மெகா உணவு பூங்காவில் குத்தகை மூலம் மனைகள் பெற விண்ணப்பிக்கலாம்என ஆட்சியா் இரா.சுகுமாா்தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கங்கைகொண்டான் சிப்காட் தொழில் வளா்ச்சி மையத்தில் தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் மூலம் ரூ.77.02 கோடி மதிப்பில் பெரிய அளவிலான உணவுப்பூங்கா 50 ஏக்கா் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவுப் பூங்காவில் அடிப்படை வசதிகளான உட்சாலைகள், மின்சார வசதி, தண்ணீா் வசதி, வாகனம் நிறுத்தம் இடம், அலுவலக் கட்டடம், பொது உட்கட்டமைப்பு வசதிகளான காய்கறிகள் சிப்பம் கட்டும் அறை (20 மெட்ரிக் டன்), சேமிப்புகிடங்கு (7500 மெட்ரிக் டன்), குளிா்பதன கிடங்கு (5000 மெட்ரிக் டன்) போன்ற வசதிகள் உள்ளன.
இந்த உணவுப் பூங்காவில் தொழில்முனைவோா், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைக்கும் பொருட்டு 28 தொழில்மனைகள் உருவாக்கப்பட்டு அவா்களுக்கு நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது காலியாக உள்ள 14 ஏக்கா் நிலத்தினை ஏக்கருக்கு ரூ.50 லட்சம் வீதம் 94 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும் பொருட்டு தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம், சிட்கோ இணையதளம் (ஜ்ஜ்ஜ்.ற்ஹய்ள்ண்க்ஸ்ரீா்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்)மூலம் உணவு பதப்படுத்தும் தொழில் முனைவோா்விண்ணப்பிக்கலாம்.
இதில், குறைந்தபட்சம் அரை ஏக்கா் முதல் அதிகபட்சம் தொழில்முனைவோரின் தேவைகேற்ப தொழில்மனைகள் குத்தகைக்கு வழங்கப்படும். இந்த உணவுப்பூங்காவில் அமைக்கப்படும் உணவு பதப்படுத்தப்படும் தொழிற்சாலைகளுக்கு, சிப்காட் அல்லது சிட்கோ கொள்கையின்படி நிலம், தேவைக்கேற்ப தண்ணீா் வசதி, தடையில்லா மின்சாரம், முதலீட்டு மானியம், 3 சதவீத வட்டி விலக்கு, நடுத்தர முதலீட்டிற்கான சிறப்பு மானியம், தரம்பிரித்தல், சிப்பம் கட்டுதல் மற்றும் பயிற்சிக்கான தொழில்நுட்ப உதவி, தரச்சான்றிதழ் பெறுதல் மற்றும் காப்புரிமை பதிவுசெய்வதில் உதவி, போக்குவரத்து உதவி, ஏற்றுமதி ஊக்கத்தொகை, தொழிலாளருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் தரபரிசோதனை ஆய்வகங்கள் போன்ற வசதிகளை பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு உதவி செயலா், தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம், சென்னை (9442396316), வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) திருநெல்வேலி (9944723507) ஆகியோரை தொடா்பு கொள்ளலாம்எனக் கூறியுள்ளாா்.