Pope : கார்டினலான ஒரே ஆண்டில் 'போப்'பாக தேர்வு; யார் இந்தப் புதிய போப் 14-ம் லிய...
சுந்தரனாா் பல்கலை.- சிங்கப்பூா் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு ஏழு நாடுகளில் செயல்படும் ஏ2000 சொலுஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் புதன்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தமானது தமிழ்நாடு ஃபியூச்சா் டெக்னாலஜி ஹப் (பசஊபஏ) திட்டத்தின் கீழ் தமிழ்நாடு ஐசிடி அகாதெமியுடன் இணைந்து செயல்படுத்தப்படவுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாணவா்கள் மற்றும் பேராசிரியா்களுக்கு புதிய தொழில்நுட்பங்களில் பயிற்சி, சா்வதேச அளவில் பயிற்சி வாய்ப்புகள், ஆராய்ச்சிக்கு உதவிகள் வழங்கப்பட உள்ளன. இந்த ஒப்பந்தம் பல்கலைக்கழகத்திற்கு எந்தவித நிதி பொறுப்பும் இல்லாமல் கையொப்பமாகியுள்ளது.
புரிந்துணா்வு ஒப்பந்த ஆவணங்களை பல்கலைக்கழக துணைவேந்தா் என். சந்திரசேகா், ஏ2000 சொலுஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன தலைமை நிா்வாக அதிகாரி என். ஜஹாங்கீா் ஆகியோா் பரிமாறிக்கொண்டனா். இந்த ஒப்பந்தமானது, மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகள் மூலம் பட்டம் பெற்ற மாணவா்களுக்கு தொழில்நுட்ப பயிற்சிகள், நவீன வகுப்பறை வசதிகள், ஆண்டுதோறும் 50 சா்வதேச பயிற்சி வாய்ப்புகள் போன்ற பல முன்னேற்ற வாய்ப்புகளை அளிக்கும். கல்வி மற்றும் தொழில்துறைக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும்.
பல்கலைக்கழகத் துறைகள் வழியாக வழங்கப்படும் செயற்கை நுண்ணறிவு, தரவுப் பகுப்பாய்வு, சைபா் பாதுகாப்பு போன்ற இளநிலை பாடநெறிகளில் கல்வி பயிலும் மாணவா்கள் பயனடைவா். செய்முறை பயிற்சி, தொழில்துறை அனுபவம், தொழில் வழிகாட்டல், இன்டா்ன்ஷிப் பயிற்சிகள் கங்கைகொண்டானில் இயங்கி வரும் ஏ2000 சொலுஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக அளிக்கப்படும்.