செய்திகள் :

நள்ளிரவில் களமிறங்கிய கடற்படை... டார்கெட் செய்யப்பட்ட கராச்சி துறைமுகம்!

post image

கடந்த மாதம் 22-ம் தேதி நடந்த பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, நேற்று முன்தினம் (மே 7) 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்தியா பதிலடி கொடுத்தது.

இந்தத் திட்டம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்களில் நடத்தப்பட்டது. இதற்கு "தக்க பதிலடி" கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியிருந்தார்.

இந்த நிலையில், நேற்று முதல் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.

பாகிஸ்தான் எல்லையில் ஏவுகணைகளை ஏவி வருகிறது. இவற்றை இந்திய ராணுவம் தனது ஆயுதங்கள் மூலம் தகர்த்து வருகிறது.

ஐ.என்.எஸ் விக்ராந்த்
ஐ.என்.எஸ் விக்ராந்த்

இந்தியக் கடற்படை...

பாகிஸ்தானின் தாக்குதல்களை மேலும் எதிர்கொள்ள, இந்தியக் கடற்படை அரேபியக் கடலில் களமிறங்கியுள்ளது. தற்போது இந்தியக் கடற்படை அரேபியக் கடலில் பாகிஸ்தானுக்கு எதிராக பதிலடித் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும், இந்தத் தாக்குதல்களுக்கு ஐ.என்.எஸ். விக்ராந்தைப் பயன்படுத்துவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்தத் தாக்குதலை இந்தியா பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தின் மீது நடத்தியது என்று கூறப்படுகிறது.

அமெரிக்கா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளும் விரைவில் சமாதானம் செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

NCP : `அஜித் பவார் - சுப்ரியா சுலே முடிவு செய்வார்கள்’ - அணிகள் இணைவதில் இறங்கி வந்த சரத் பவார்

தேசியவாத காங்கிரஸ் கடந்த 2023-ம் ஆண்டு திடீரென இரண்டாக உடைந்தது. சரத் பவாரின் சகோதரர் மகன் அஜித் பவார் கட்சியை இரண்டாக உடைத்ததோடு, பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் தன்னிடம் இருப்பதாக கூறி கட்சியையும், சின... மேலும் பார்க்க

முடக்கப்பட்ட 'The Wire' இணையதள பக்கம் - செய்தி நிறுவனம் சொல்வதென்ன?

'The Wire' இணையதளம் மத்திய அரசால் தற்போது முடக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.அவர்கள் அறிவித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது..."அன்பிற்குரிய 'தி வயர்' வாசகர்களுக்கு,இந்திய அர... மேலும் பார்க்க

3 புறமும் பாகிஸ்தான்; ஒரே சாலை தான் வழி - போர் பதட்டமின்றி இருக்கும் இந்த பஞ்சாப் கிராம மக்கள்!

காஷ்மீரில் கடந்த மாத இறுதியில் தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலை தொடர்ந்து... மேலும் பார்க்க

"கடவுளே... நாட்டை காப்பாற்றுங்கள்" - பாக். நாடாளுமன்றத்தில் அதன் முன்னாள் ராணுவ மேஜர் பேசியது என்ன?

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை அதிகரித்து வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத இடங்களில் தாக்குதலை நடத்தியது இந்தியா. 'இதற... மேலும் பார்க்க

India - Pakistan Tension: நேற்று தொடங்கிய இந்தியா - பாக். தாக்குதல்; இதுவரை நடந்தது என்ன?

இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று முதல் கடும் தாக்குதல் நடந்து வருகிறது.இதுவரை இந்தத் தாக்குதலில் நடந்த முக்கிய 10 விஷயங்கள் குறித்து பார்க்கலாம்...ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தான் பிர... மேலும் பார்க்க

'போர் எளிய மக்களின் உயிரை அழித்து மீளாத்துயரத்தை தரக்கூடியது'- எழுத்தாளர்கள், கலைஞர்கள் அறிக்கை

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் தமிழ் எழுத்தாளர்களும், கலைஞர்களும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர். அந்த அறிக்கையில், “பஹல்காமில் தாக்குதலுக்குள்ளானவர்களை மீட்பதிலும் பாது... மேலும் பார்க்க