செய்திகள் :

`இப்போ டெல்லியில் தானே இருக்கீங்க?’ - தமிழ்நாட்டில் NEP-ஐ அமல்படுத்த தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

post image

பாஜக-வை சேர்ந்த வழக்கறிஞரான ஜி.எஸ் மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், `முன்மொழிக் கொள்கை உட்பட பல்வேறு முக்கிய அம்சங்களை கொண்டு புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு உருவாக்கியது. ஆனால் அரசியல் காரணங்களுக்காக தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் இதை முழுமையாக செயல்படுத்தாமல் இருக்கிறது. எனவே புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் உடனடியாக செயல்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டிருந்தார்.

தேசிய கல்விக் கொள்கை - 2020

உத்தரவிட முடியாது

இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பர்த்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்தபோது, ``தேசிய கல்விக் கொள்கையை மாநில அரசுகள் ஏற்றுக் கொள்கிறதா இல்லையா என்பது ஒரு சிக்கலான பிரச்னை . அது அந்தந்த மாநிலங்களில் கொள்கை சார்ந்த விஷயம். இதில் எந்த ஒரு நீதிமன்றமும் நேரடியாக, `கட்டாயம் இந்த தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துங்கள்’ என உத்தரவிட முடியாது.

இந்த தேசிய கல்விக் கொள்கையை ஒரு மாநிலம் செயல்படுத்துவதன் மூலம் அல்லது செயல்படுத்தாமல் இருப்பதன் மூலம் ஏதேனும் அடிப்படை உரிமை மீறப்படுகிறது என்றால் நாங்கள் தலையிட முடியும். ஆனால் இந்த வழக்கில் அது போன்ற அம்சங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனவே இந்த மனுவை விசாரிக்க முடியாது” எனக்கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

வழக்கு விசாரணையின் போது வழக்கறிஞர் ஜி.எஸ் மணி, `தான் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றும் தமிழ்நாட்டில் இருந்தவரை தன்னால் இந்தி படிக்க முடியவில்லை. தன்னை படிக்க விடாமல் தடுத்தார்கள். தற்பொழுது நான் டெல்லியில் வசிக்கிறேன்’ என கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ``இப்போது டெல்லியில் வசிக்கிறீர்கள் தானே இப்பொழுது தாராளமாக நீங்கள் இந்தி கற்றுக் கொள்ளலாமே” என சற்று கடுகடுப்புடன் கூறினர்.

'செங்கோட்டையை மட்டும் ஏன் கேக்குறீங்க, கூடவே...' - சொந்தம் கொண்டாடிய பெண்; காட்டமான உச்ச நீதிமன்றம்!

உச்ச நீதிமன்றத்தில் சுல்தானா பேகம் என்ற பெண் வித்தியாசமான மனுவை தாக்கல் செய்திருந்தார்.அதில் முகலாயர்களின் கடைசி மன்னனான பகதூர் ஷாவின் பேரன்வழி பேரனின் மனைவி தான் என்றும் கணவனை இழந்தவர் என்றும் கூறியி... மேலும் பார்க்க

கரூர்: `எச்சில் இலையில் உருளும் நெரூர் மட சடங்குக்குத் தடை...' - உச்ச நீதிமன்றம் உத்தரவு

கரூர் மாவட்டம், நெரூர் கிராமத்தில் சதாசிவ பிரம்மேந்திரர் என்ற சாமியாரின் சமாதியில், அவரது நினைவு நாளில் பக்தர்கள் எச்சில் இலையில் உருளும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.மனித நேயத்திற்கு எதிரானது ம... மேலும் பார்க்க

விவாகரத்து: பெண்ணுக்கு 'தங்க நகைகள்' திருப்பிக்கொடுக்கப்பட வேண்டுமா? - நீதிமன்ற உத்தரவு என்ன?

திருமணத்தின் போது மணப்பெண்ணுக்குக் கொடுக்கப்படும் நகைகளும் பணமும் (சீதனம்) பெண்ணின் தனிப்பட்ட சொத்து என உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது கேரள உயர் நீதிமன்றம்.எர்ணாகுளம் மாவட்டம், கலமசேரியைச் சேர்ந்த பெ... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வழக்கு மே13-ம் தேதி தீர்ப்பு... நீதிபதி மாற்றமும், விளக்கமும்!

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாலியல் வழக்கு நாட்டையே அதிரவைத்தது. பொள்ளாச்சிபாலியல்வன்கொடுமை விவகாரம் அம்பலமாகி 6 ஆண்டுகள் ஆகிவிட்டன. “அண்ணா பெல்ட்டால அடிக்காதீங்க” எனக் ... மேலும் பார்க்க

கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கு : குற்றவாளிகளின் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்!

கடலூர் மாவட்டம் குப்பநத்தம் புது காலனி பகுதியைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த சாமி கண்ணு எனும் நபருடைய மகனான முருகேசன் இளங்கலைப் படிப்பு படித்து வந்துள்ளார்.உச்ச நீதிமன்றம் அதே பகுதியில் உள்ள இடை... மேலும் பார்க்க

Bombay High Court: `நாய் மாஃபியா' - நீதி மன்றத்தை அவமதித்த பெண்; 20,000 அபராதம் விதித்து நடவடிக்கை

கடந்த ஜனவரி மாதம், மும்பையில் தெருநாய்களுக்கு உணவளிப்பதனால், தான் வசிக்கும் குடியிருப்பின் நிர்வாகக் குழு தனக்கு துன்பம் ஏற்படுத்துவதாக லீலா வர்மா என்ற பெண்மணி உயர் நீதிமன்றத்தில் குடியிருப்பு சங்கத்த... மேலும் பார்க்க