செய்திகள் :

ரெட்ரோ 100 கோடி வசூல்: சூர்யாவுக்கு வைர மோதிரம் பரிசு!

post image

ரெட்ரோ திரைப்படம் 100 கோடி வசூல் செய்ததையொட்டி, சூர்யாவுக்கு வைர மோதிரம் பரிசாக அளிக்கப்பட்டது.

2 டி என்டர்டெய்ன்மென்ட் - ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'ரெட்ரோ' திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாகி முதல் வார இறுதியில் உலகம் முழுவதிலும் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையிலும் , படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவிப்பதற்காக படக் குழுவினர் பிரத்யேக நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.

சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திரையுலகினரும், படக் குழுவினரும், ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் 'ரெட்ரோ' படத்தை தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் விநியோகம் செய்த சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் உரிமையாளரான சக்தி வேலன், படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நாயகனான சூர்யாவிற்கும் வைர மோதிரத்தைப் பரிசாக அளித்தார்.

இது தொடர்பாக விநியோகஸ்தர் சக்தி வேலன் குறிப்பிடுகையில், ''இவ்வருடத்தில் வெளியான திரைப்படங்களில் அதிக இலாபம் தந்தத் திரைப்படமாக ரெட்ரோ அமைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம்.

இத்திரைப்படம் உருவாக காரணமான தயாரிப்பாளர்கள் மற்றும் முக்கிய கலைஞர்களான இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசியர், ஒளிப்பதிவாளர் போன்றவர்களுக்கு வைர மோதிரங்களைப் பரிசாக வழங்கினோம்.

சூர்யா அண்ணாவிற்கு மோதிரம் வழங்கிய போது அதனை உடனடியாக மீண்டும் எனக்கே திரும்ப அணிவித்து, தன் அன்பையும் ஆதரவையும் பகிர்ந்து கொண்டார், அது என் வாழ்வில் மற்றொரு நெகிழ்வான தருணமாக மாறியது. இந்நெகிழ்ச்சி எனக்கு முதல் முறையல்ல, முன்பு 'கடைகுட்டி சிங்கம்' வெற்றி விழாவில் தங்க செயின் மற்றும் 'விருமன்' வெற்றி விழாவில் வைர பிரேஸ்லெட் பரிசாக வழங்கும் போதும் சூர்யா அண்ணா எனக்கே அதை திரும்ப அணிவித்தார்.'' என்றார்.

இதையும் படிக்க: ஜி.வி.பிரகாஷ் - கயாது லோஹர் படத்தின் பெயர் அறிவிப்பு!

பாதுகாப்பாக தில்லி திரும்பிய ஐபிஎல் வீரர்கள்!

ஹிமாசலப் பிரதேசம் தர்மசாலாவில் இருந்து சாலைமார்க்கமாக கிரிக்கெட் வீரர்கள் தில்லிக்கு இன்று (மே 9) அழைத்துவரப்பட்டனர்.தில்லியின் சாஃபர்ஜங்க் பகுதியில் இருந்து சிறப்பு வந்தே பாரத் ரயில் மூலம் அவர்கள் அழ... மேலும் பார்க்க

தொடர் தாக்குதலால் சேதமடைந்த வீடு - புகைப்படங்கள்

ஷெல் தாக்குதலை தொடர்ந்து ஏராளமான குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்தால் வெறிச்சோடிய சாலை.பாரமுல்லா பகுதியில் கடுமையான துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் தாக்குதலுக்குப் பிறகு சேதமடைந்த வீட... மேலும் பார்க்க

ஜி.வி.பிரகாஷ் - கயாது லோஹர் படத்தின் பெயர் அறிவிப்பு!

நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் கயாது லோஹர் நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து படங்களிலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் 25ஆவது படமாக... மேலும் பார்க்க

ஹாலிவுட்டில் அறிமுகமாகும் கங்கனா ரணாவத்..! குவியும் வாழ்த்துகள்!

நடிகை கங்கனா ரணாவத் ஹாலிவுட் படத்தில் முதல்முறையாக நடிக்கவிருக்கிறார்.நடிகையும் எம்பியுமான கங்கனா ரணாவத் இயக்கத்தில் சமீபத்தில் எமர்ஜென்சி என்ற திரைப்படம் வெளியானது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வா... மேலும் பார்க்க