என் வீட்டருகே இடைவிடாது குண்டுவெடிப்பு சப்தங்கள்: முதல்வர் ஒமர் அப்துல்லா
நான் இருக்கும் இடத்தில் இடைவிடாது குண்டு வெடிப்பு சப்தங்கள் கேட்கின்றன என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஜம்முவில் இப்போது மின் தடை. நகரம் முழுவதும் சைரன்கள் கேட்கின்றன. நான் இருக்கும் இடத்தில் இடைவிடாத குண்டுவெடிப்பு சப்தங்கள், அநேகமாக கனரக பீரங்கி சப்தங்கள் இப்போது கேட்கின்றன.
ஜம்மு மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வேண்டுகோள், அடுத்த சில மணிநேரங்களுக்கு தெருக்களில் இருந்து விலகி இருங்கள். வீட்டிலேயே அல்லது நீங்கள் வசதியாக தங்கக்கூடிய அருகிலுள்ள இடத்தில் இருங்கள்.
மீண்டும் பதிலடி தாக்குதலுக்கு தயாராகிறதா இந்தியா? இன்றும் இருளில் மூழ்கிய நகரங்கள்!
வதந்திகளைப் புறக்கணிக்கவும், ஆதாரமற்ற அல்லது சரிபார்க்கப்படாத கதைகளைப் பரப்ப வேண்டாம். நாம் இதை ஒன்றாகக் கடந்து செல்வோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் ட்ரோன் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு இந்திய தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வரப்படுகிறது.
பாகிஸ்தானின் ட்ரோன்களை இந்திய ராணுவம் இடைமறித்து தாக்கி வீழ்த்தி உள்ளன.
முன்னதாக இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவி வரும் நிலையில், ஜம்மு - காஷ்மீர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் பல்வேறு நகரங்களில் மின் விநியோகம் வெள்ளிக்கிழமை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.