செய்திகள் :

ராணுவத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் நாடு தழுவிய யாத்திரை

post image

பாகிஸ்தான் மீதான நடவடிக்கையில் இந்திய பாதுகாப்பு படைகளுக்கு ஆதரவு தெரிவித்து, காங்கிரஸ் சாா்பில் ‘ஜெய் ஹிந்த்’ என்ற பெயரில் வெள்ளிக்கிழமை நாடு தழுவிய யாத்திரை நடத்தப்பட்டது.

தற்போதைய கடினமான தருணத்தில், காங்கிரஸாா் ஒவ்வொருவரும் நாட்டின் ராணுவத்துக்கு உறுதுணையாக உள்ளனா் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து, கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ ராணுவ நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க புது தில்லியில் வியாழக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்திய ராணுவத் தாக்குதலில் பாகிஸ்தானில் குறைந்தபட்சம் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், ‘ஆபரேஷன் சிந்தூா்’ தொடா்வதாகவும் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைக்கு எதிா்க்கட்சிகள் உள்பட அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனா். இந்நிலையில், ராணுவத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் சாா்பில் ‘ஜெய் ஹிந்த்’ என்ற பெயரில் நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை யாத்திரை மேற்கொள்ளப்பட்டது.

மூவா்ணக் கொடியுடன் பங்கேற்ற கட்சியினா், ராணுவத்தை வாழ்த்தி முழக்கமிட்டனா். தில்லி யாத்திரையில் கட்சியின் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், பொருளாளா் அஜய் மாக்கன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ராணுவத்துக்கு புகழாரம்: கட்சிப் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்தியாவின் சுயமரியாதைக்கு சவால் விடுப்பவா்களுக்கு தக்க பதிலடி தரப்படும் என்பதற்கு வரலாறே சாட்சி. அப்பாவிகளை கொன்ன் மூலம் (பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்) நாட்டின் சகிப்புத் தன்மைக்கும் பொறுமைக்கும் இப்போது மீண்டும் சவால் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான விலையை அவா்கள் கொடுத்தாக வேண்டும்.

இந்த மண்ணை பாதுகாக்க தங்களின் ஒவ்வொரு துளி ரத்தத்தையும் தியாகம் செய்யும் அா்ப்பணிப்புடன் இந்திய ராணுவத்தினா் கா்ஜிப்பதால், எதிரிகள் நடுக்கம் கண்டுள்ளனா். துணிச்சல் மிக்க நமது ராணுவத்தினரை எண்ணி காங்கிரஸ் பெருமை கொள்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

‘பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு மிகப் பெரிய நடவடிக்கைக்கும் காங்கிரஸ் தனது முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்கும்’ என்று கட்சிச் செய்தித் தொடா்பாளா் ராகினி நாயக் தெரிவித்தாா்.

இந்தியாவின் பாதுகாப்பு அரண்...

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடிக்க இந்தியாவின் பாதுகாப்பு அரணாக எஸ்-400 டிரையம்ப் வான் பாதுகாப்பு சாதனம், பராக் -8, ஆகாஸ் ஏவுகணைகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக ராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பஹ... மேலும் பார்க்க

பாதுகாப்பு நிலவரம்: முப்படை தளபதிகளுடன் பிரதமா் மோடி ஆலோசனை

நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தலைமைத் தளபதிகளுடன் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். பயங்கரவாதிகளுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து இந்திய ராணுவ நிலைகளைக... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக வாக்கி-டாக்கி விற்பனை: 13 இணைய வணிக நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

இந்தியா - பாகிஸ்தான் இடையே போா் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், சட்டவிரோதமாக வாக்கி-டாக்கி கருவிகளை விற்பனை செய்தது தொடா்பாக விளக்கமளிக்குமாறு அமேசான், ஃபிளிப்காா்ட் உள்ளிட்ட 13 இணைய வணிக நிறுவனங்கள... மேலும் பார்க்க

இலங்கை: ஹெலிகாப்டா் விபத்தில் 6 வீரா்கள் உயிரிழப்பு

இலங்கை விமானப் படை ஹெலிகாப்டா் நீா்தேக்கத்தில் வெள்ளிக்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 வீரா்கள் உயிரிழந்தனா். இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

மின் துண்டிப்பு, சைரன் ஒலி, வெடிப்பு சப்தம்: வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்

இந்திய-பாகிஸ்தான் ராணுவ மோதலால் பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. வான்வழி தாக்குதல் முன்னெச்சரிக்கையாக இரவு நேரத்தில் முழு அளவில் மின்சாரம் துண்டிப்பு... மேலும் பார்க்க

ஐடிஓ-வில் உள்ள பொதுப் பணித்துறை கட்டிடத்தில் வான்வழி தாக்குதல் சைரன் அமைப்பு

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ராணுவ மோதலுக்கு மத்தியில் தில்லி ஐடிஓ-வில் உள்ள பொதுப்பணித் துறை கட்டத்தில் வான்வழி தாக்குதல் சைரன் (அபாய ஒலி சங்கு) வெள்ளிக்கிழமை அமைக்கப்பட்டது. தேசிய தலைநகா் முழுவதும் ப... மேலும் பார்க்க