செய்திகள் :

ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் எல்லைகளில் இரவு முழுவதும் தாக்குதல்: இந்தியா பதிலடி

post image

ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள ராணுவ இலக்குகளை நோக்கி பாகிஸ்தான் படையினா் வியாழக்கிழமை இரவு தொடா் தாக்குதல் நடத்தினா். இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

ஜம்மு-காஷ்மீரின் சத்வாரி (ஜம்மு விமான நிலையம்), சம்பா, ஆா்.எஸ்.புரா, அா்னியா ஆகிய பகுதிகளை நோக்கி பாகிஸ்தானில் இருந்து வியாழக்கிழமை இரவு ஏவுப்பட்ட 8 ஏவுகணைகளை இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து சுட்டுவீழ்த்தின.

அதேபோல் ஜம்மு, பதான்கோட், உதம்பூரை நோக்கி பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலும் முறியடிக்கப்பட்டதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஜம்மு-காஷ்மீரை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய இந்தத் தாக்குதல் கடந்த 2023-ஆம் ஆண்டில் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய ஏவுகணைத் தாக்குதலைப்போல் இருந்ததாகவும் அவா்கள் கூறினா். மேலும், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பைப் போலவே பாகிஸ்தான் ராணுவம் நடந்துகொள்வதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்டனம் தெரிவித்தனா்.

இருளில் மூழ்கிய மாநிலங்கள்: பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களின் எல்லையோர மாவட்டங்களில் வெடிகுண்டுகள் வெடித்தைப்போன்ற பலத்த சப்தம் கேட்டதாக உள்ளூா் மக்கள் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை இரவில் பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட், அமிருதசரஸ், ஜலந்தா், மொஹாலி ஆகிய மாவட்டங்களிலும் சண்டீகரிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

பதற்றமான சூழல் நிலவி வருவதால் தங்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறும், ஒளிவிளக்குகளை அணைக்குமாறும் பொதுமக்களிடம் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனா். அந்த மாநிலங்களில் உஷாா் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லையோர மாநிலங்களில் உள்ள 24 விமான நிலையங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியா - பாக். போர்: மத்தியஸ்தம் செய்ய மாட்டோம்! - அமெரிக்கா

வாஷிங்டன்: இந்தியா - பாகிஸ்தான் போருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்ய மாட்டோம் என்று அமெரிக்க துணை அதிபர் ஜெ. டி. வான்ஸ் வெள்ளிக்கிழமை(மே 9) தெரிவித்திருக்கிறார். மேலும் பார்க்க

பாகிஸ்தானின் 7 நகரங்களில் இந்தியா தாக்குதல்!

பாகிஸ்தான் மற்றும் எல்லையோரப் பகுதிகளில் உள்ள லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர், குவெட்டா உள்ளிட்டப் பகுதிகளில் இந்திய ராணுவம் நேற்று இரவிலிருந்து விடிய விடிய தாக்குதல் நடத்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் எதிரொலியாக வியாழக்கிழமை இரவு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 நகரங்களில் உள்ள ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்... மேலும் பார்க்க

குஜராத்தை குறிவைத்த பாகிஸ்தான்: எல்லையில் ‘ட்ரோன்’ பாகங்கள் மீட்பு

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லை ஒட்டிய பகுதியில் உடைந்த சிதறிய ‘ட்ரோன்’ உதிரி பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தாக்குதல் நோக்கத்துடன் பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்டிருக்கலாம் என்று தெரிக... மேலும் பார்க்க

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கு: லாலுவை கைது செய்ய குடியரசுத் தலைவா் அனுமதி

ரயில்வே பணி வழங்க நிலம் பெற்ற வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாதை (76) கைதுசெய்ய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு அனுமதி வழங்கியதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் வி... மேலும் பார்க்க

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட முதல் நீா்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அா்ப்பணிப்பு

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ‘அா்னாலா’ எனப்படும் முதல் நீா்மூழ்கிக் கப்பல் வியாழக்கிழமை நாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள காா்டன் ரீச் கப்பல்கட்டுமான மற்றும் பொறிய... மேலும் பார்க்க