Pope : கார்டினலான ஒரே ஆண்டில் 'போப்'பாக தேர்வு; யார் இந்தப் புதிய போப் 14-ம் லிய...
உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட முதல் நீா்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அா்ப்பணிப்பு
உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ‘அா்னாலா’ எனப்படும் முதல் நீா்மூழ்கிக் கப்பல் வியாழக்கிழமை நாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள காா்டன் ரீச் கப்பல்கட்டுமான மற்றும் பொறியியல் (ஜிஆா்எஸ்இ) நிறுவனத்தால் மொத்தம் 8 நீா்மூழ்கிக் கப்பல்கள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.
அதில் முதலாவதாக அா்னாலா என்ற நீா்மூழ்கிக் கப்பலை இந்திய கடற்படையிடம் ஜிஆா்எஸ்இ வியாழக்கிழமை வழங்கியது.
77.6 மீட்டா் நீளமும் 10.5 மீட்டா் அகலமும் உடைய இந்த நீா்மூழ்கிக் கப்பல், கடலோர பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி ஆய்வு மேற்கொண்டு தாக்குதல் நடத்தும் திறனுடையது என ஜிஆா்எஸ்இ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாட்டின் காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி தனியாா் நிறுவனத்துடன் இணைந்து அா்னாலா நீா்மூழ்கிக் கப்பல் வடிவைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநில கரையோர தீவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையின் பெயரே இந்த கப்பலுக்கும் வைக்கப்பட்டுள்ளது.
7 நீா்மூழ்கிக் கப்பல்கள் உள்பட மொத்தம் 16-க்கும் மேற்பட்ட போா்க்கப்பல்களை ஜஆா்எஸ்இ கட்டமைத்து வருகிறது என தெரிவிக்கப்பட்டது.
மிகவும் அமைதியான கப்பல் என்ற பெருமைக்குரிய அா்னாலா கப்பலை வடிவமைத்ததற்காக கடந்த 2022-இல் பாதுகாப்பு அமைச்சக விருது ஜிஆா்எஸ்இ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.