செய்திகள் :

Pope : கார்டினலான ஒரே ஆண்டில் 'போப்'பாக தேர்வு; யார் இந்தப் புதிய போப் 14-ம் லியோ?

post image

கடந்த ஏப்ரல் 21-ம் தேதி, கத்தோலிக்க மதத் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் காலமானார்.

இவரது மறைவையடுத்து, 'அடுத்து போப் யார்?' என்கிற ரகசிய வாக்கெடுப்பு நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் வாக்கெடுப்பில், போப்பாக யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

அதனால், ரகசிய வாக்கெடுப்பு நேற்றும் தொடர்ந்தது. அந்த வாக்கெடுப்பில் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன் அடையாளமாக, ரகசிய வாக்கெடுப்பு நடந்த வாடிகனில் உள்ள சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் வெண்ணிற புகை வெளியேற்றப்பட்டது.

இந்த ரகசிய வாக்கெடுப்பில் 133 கார்டினல்கள் கலந்துகொண்டனர்.

வெண்ணிற புகை வெளியேற்றப்பட்ட சில மணிநேரங்களிலேயே, புதிய போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பதினான்காம் லியோ மக்கள் முன் தோன்றினார்.

போப் பதினான்காம் லியோ
போப் பதினான்காம் லியோ
போப் பிரான்சிஸ் - போப் பதினான்காம் லியோ

யார் இந்த பதினான்காம் லியோ?

அமெரிக்காவின் சிகாகோவைச் சேர்ந்தவர் பதினான்காம் லியோ. இவரது இயற்பெயர் ராபர்ட் பிரிவோஸ்ட் ஆகும். இவரது வயது 69.

போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, தங்களது பெயரை மாற்றிக்கொள்வது மரபு. அதன்படி, ராபர்ட் பிரிவோஸ்ட் என்கிற தனது பெயரை, 'பதினான்காம் லியோ' என்று மாற்றியுள்ளார் புதிய போப்.

அமெரிக்காவைச் சேர்ந்த முதல் போப் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இவர். அதாவது, இதுவரை வட அமெரிக்காவிலிருந்து யாரும் போப்பாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இவரே வட அமெரிக்காவைச் சேர்ந்த முதல் போப்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம், இவரை கார்டினலாக நியமித்தார் அப்போது போப்பாக இருந்த போப் பிரான்சிஸ்.

போப் பிரான்சிஸ் இவர் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருந்ததாகவும், அவர் போப் லியோவைச் சிறந்த தலைவராகக் கருதியதாகவும் கூறப்படுகிறது.

போப் பதினான்காம் லியோவுக்கு காலநிலை மற்றும் சேவை இரு கண்கள்.

போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியே வந்து மக்களிடம் உரையாற்றிய போப் லியோவின் முதல் பேச்சின் மையம் 'அமைதி'யைச் சுற்றியே இருந்தது.

Pope: `போப் பிரான்சிஸின் தைரியமான குரலை நம் செவிகளில் வைத்திருப்போம்'- புதிய போப் ராபர்ட் ப்ரீவோஸ்ட்

கத்தோலிக்க மதத் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த மாதம் 21-ம் தேதி இயற்கை எய்தினார். இவரது மறைவைத் தொடர்ந்து 'அடுத்த போப் யார்?' என்கிற ரகசிய வாக்கெடுப்பு நேற்று முன்தினம் நடைபெற்றது. முதல் நாள் வா... மேலும் பார்க்க

`நோய் தீரவில்லை..' - மதச் சடங்கை கடைப்பிடித்து உயிரிழந்த ஐ.டி தம்பதியின் 3 வயது மகள்

ஜெயின் மதத்தை சேர்ந்தவர்கள் சந்தாரா என்ற ஒரு மத சடங்கை கடைப்பிடிப்பது வழக்கம். வயதானவர்கள் இது போன்ற மதசடங்கை கடைப்பிடித்து எதுவும் சாப்பிடாமல் இருந்து உயிரை துறப்பது வழக்கம்.மத்திய பிரதேசத்தை சேர்ந்த... மேலும் பார்க்க

Pope Francis: போப் இறுதிச் சடங்கு; உலகத் தலைவர்கள் பங்கேற்பு, குவியும் லட்சக்கணக்கான மக்கள்

கத்தோலிக்கத் திருச்சபையின் 266-வது போப்பாகவும், வாட்டிக்கன் நகரத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட போப் பிரான்சிஸ்(88) உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி மரணமடைந்தார்.போப் அவர்களின் உடல் ரோம... மேலும் பார்க்க

மும்பை: நீதிமன்ற உத்தரவுக்கு முன் ஜெயின் கோயிலை இடித்த மாநகராட்சி; மக்கள் போராட்டம்; பின்னணி என்ன?

மும்பை விலே பார்லே பகுதியில் கடந்த வாரம் 35 ஆண்டு பழமையான ஜெயின் கோயிலை மாநகராட்சி நிர்வாகம் இடித்தது.அதுவும் அக்கோயில் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக இல்லை. 90 ஆண்டு பழமையான பங்களாவிற்குள் இருந்த... மேலும் பார்க்க

Pope தேர்தல் எப்படி நடைபெறும்; தேர்வுசெய்யும் குழுவில் முதல் `தலித்' கார்டினல் யார் தெரியுமா?

நீண்ட நாள்களாக பல்வேறு உடல் உபாதைகளை எதிர்கொண்ட போப்பாண்டவர் பிரான்சிஸ் காலமானார். இந்த நிலையில், சில நாள்களாகவே பேசப்பட்டு வந்த புதிய போப் யார் என்ற கேள்வி தீவிரமடைந்துள்ளது. கத்தோலிக்கத் திருச்சபையி... மேலும் பார்க்க