செய்திகள் :

Pope Francis: போப் இறுதிச் சடங்கு; உலகத் தலைவர்கள் பங்கேற்பு, குவியும் லட்சக்கணக்கான மக்கள்

post image

கத்தோலிக்கத் திருச்சபையின் 266-வது போப்பாகவும், வாட்டிக்கன் நகரத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட போப் பிரான்சிஸ்(88) உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி மரணமடைந்தார். போப் அவர்களின் உடல் ரோம் நகரின் வாடிக்கனில் அமைந்துள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா கத்தோலிக்க தேவாலயத்தின் முன் வைக்கப்பட்டிருக்கிறது.

போப் பிரான்சிஸ் அஞ்சலி நிகழ்வு

இறுதிச் சடங்கு வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 26) நடைபெறவிருக்கிறது. அவரது உடல் வாடிக்கனில் இருக்கும் அவரது காசா சாண்டா மார்டா, மாளிகையில் அடக்கம் செய்யப்படவிருக்கிறது.

செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா கத்தோலிக்க தேவாலயத்தில், புதன் கிழமையிலிருந்து சனிக்கிழமை வரை மூன்று நாள்கள் போப் பிரான்சிஸ் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

போப் பிரான்சிஸ் அஞ்சலி நிகழ்வு

இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக 25 லட்சம் பொதுமக்கள் வரை வாடிக்கனில் குவிய நேரிடலாம் என அரசின் சார்பில் எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் பலமாக செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, பிரேசில், லெபனான், அர்ஜென்டினா உள்ளிட்ட பல நாட்டின் முக்கியத் தலைவர்கள், அதிபர்கள், பாதிரியார்கள், கார்டினல்கள் இந்த அஞ்சலி மற்றும் இறுதிச் சடங்கு நிகழ்வில் கலந்துகொள்கின்றனர். இதனால் வாடிக்கன் நகரம் முழுக்க உயர் மட்டப் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

மும்பை: நீதிமன்ற உத்தரவுக்கு முன் ஜெயின் கோயிலை இடித்த மாநகராட்சி; மக்கள் போராட்டம்; பின்னணி என்ன?

மும்பை விலே பார்லே பகுதியில் கடந்த வாரம் 35 ஆண்டு பழமையான ஜெயின் கோயிலை மாநகராட்சி நிர்வாகம் இடித்தது.அதுவும் அக்கோயில் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக இல்லை. 90 ஆண்டு பழமையான பங்களாவிற்குள் இருந்த... மேலும் பார்க்க

Pope தேர்தல் எப்படி நடைபெறும்; தேர்வுசெய்யும் குழுவில் முதல் `தலித்' கார்டினல் யார் தெரியுமா?

நீண்ட நாள்களாக பல்வேறு உடல் உபாதைகளை எதிர்கொண்ட போப்பாண்டவர் பிரான்சிஸ் காலமானார். இந்த நிலையில், சில நாள்களாகவே பேசப்பட்டு வந்த புதிய போப் யார் என்ற கேள்வி தீவிரமடைந்துள்ளது. கத்தோலிக்கத் திருச்சபையி... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மறைவு: மோடி, ஸ்டாலின், விஜய்... - அரசியல் தலைவர்கள் இரங்கல்!

உலகம் முழுவதுமுள்ள சுமார் 140 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்ஸிஸ் தனது 88வது வயதில் மரணமடைந்துள்ளார்.நீண்டநாட்களாக நிமோனியா உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்பட்டுவந்த போப் பி... மேலும் பார்க்க