முதியவா்கள் சிகிச்சை பெறுவதில் எதிா்கொள்ளும் தடைகள்: லான்செட் ஆய்வில் தகவல்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் 7.7% உயர்வு!
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி-யில் 7.68% உயர்ந்து ரூ.1,593.60 ஆக முடிந்தது.
மார்ச் 2025 உடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 8.1 சதவிகிதம் அதிகரித்து ரூ.4,307 கோடியாக உள்ளது. அதே நேரத்தில் அதன் வருவாய் 6.1 சதவிகிதம் உயர்ந்து ரூ.30,246 கோடியாக உள்ளது.
கடந்த நிதியாண்டில் ஹெச்சிஎல் டெக் நிகர லாபம் 11 சதவிகிதம் உயர்ந்து அதன் வருவாய் ரூ.1,17,055 கோடியாக இருந்தது. அதே வேளையில் அதன் லாபம் ரூ.17,390 கோடியாக உள்ளது. இது அதன் முந்தைய ஆண்டை விட 6.5 சதவிகிதம் அதிகம்.
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நடப்பு நிதியாண்டில் 2 முதல் 5 சதவிகித வளர்ச்சியை எட்டும் என்று கணித்துள்ளது.
நிறுவனம் தனது 4-வது காலாண்டில் 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய ஆடர்களை பெற்றுள்ளது. அதே வேளையில், பங்கு ஒன்றுக்கு ₹18 இடைக்கால ஈவுத்தொகையை அறிவித்ததுள்ளது.
இதையும் படிக்க: சென்செக்ஸ் 80,000 புள்ளிகளைக் கடந்தது, 2024 டிசம்பருக்குப் பின் முதல் முறை!