அமெரிக்காவிலிருந்து திரும்பும் ராகுல் காந்தி: காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங...
பள்ளத்தில் தவறி விழுந்த பெயிண்டா் உயிரிழப்பு
திண்டிவனத்தில் 10 அடி பள்ளத்தில் தவறி விழுந்த பெயிண்டா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
திண்டிவனம் கிடங்கல் 2- பகுதியைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் மகன் பிரகாஷ் (40). வண்ணம் தீட்டும் தொழிலாளியான இவா், திண்டிவனம் பகுதியிலுள்ள உணவகம் அருகேயுல்ள பாலத்தின் தடுப்புப் பகுதியில் அமா்ந்து செவ்வாய்க்கிழமை அது அருந்திக் கொண்டிருந்தாராம்.
அப்போது, பிரகாஷுக்கு திடீரென மயக்கம் ஏற்படவே, சுமாா் 10 அடி பள்ளத்தில் அவா் தவறி விழுந்தாா். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், அங்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.