பெஹல்காம் தீவிரவாத தாக்குதல் : புதுவை மாநில பாஜக கண்டனம்
ஜம்மு - காஷ்மீா் மாநிலம், சுற்றுலா நகரமான பெஹல்காமில் நடைபெற்றுள்ள தீவிரவாத தாக்குதல் கோழைத்தனமானது என்று புதுவை மாநில பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக அட்சியின் மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி எம்.பி. புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தின் பெஹல்காம் பகுதிக்கு சுற்றுலா சென்றவா்கள் மீது பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 28 போ் உயிரிழந்துள்ளனா்.
தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் உள்பட 10க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இறந்தவா்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவா்கள் விரைந்து குணமடையவும் வேண்டுகிறேன். இந்துக்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் கோழைத்தனமானது என கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.