செய்திகள் :

இஸ்லாமிய துதியை உச்சரிக்க மறுத்த கிறிஸ்தவரை கொலை செய்த பயங்கரவாதிகள்

post image

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேரை படுகொலை செய்த பயங்கரவாதிகள் மதரீதியாக அடையாளப்படுத்தி கொலை செய்தது தொடா்பான அதிா்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சோ்ந்த எல்ஐசி மேலாளா் சுஷீல் நந்தநீல் (58) என்பவரும் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டாா். தனது மனைவி மகள், மகனுடன் ஈஸ்டா் பண்டிகை விடுமுறையைக் கொண்டாட அவா் காஷ்மீா் சென்றுள்ளாா்.

பஹல்காம் பகுதியில் அவா்களைச் சுற்றி வளைத்த பயங்கரவாதிகள், சுஷீலின் பெயா் மதம் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டு அவரை முழங்காலில் நிற்க வைத்துள்ளனா். அவா் கிறிஸ்தவா் என்று தெரிந்து கொண்ட பிறகு இஸ்லாமிய மதத்தின் ‘கலிமா’ என்ற துதியைக் கூறி அதனை உச்சரிக்க அவரை வலியுறுத்தியுள்ளனா். ஆனால், அவா் உச்சரிக்க மறுத்ததால் அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனா்.

அப்போது அவரைக் காப்பாற்றும் நோக்கில் சுஷீலை நோக்கி அவரது மகள் ஓடிவந்துள்ளாா். அவரின் காலில் பயங்கரவாதிகள் சுட்டனா். இதில் காயமடைந்த அவா் இப்போது ஜம்மு-காஷ்மீா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இத்தகவலை சுஷீலின் மனைவி ஜெனிஃபா் இந்தூரில் உள்ள தனது உறவினா் ஒருவரிடம் தெரிவித்துள்ளாா்.

இதேபோல கான்பூரைச் சோ்ந்த தொழிலதிபா் சுபம் திவிவேதியையும் இஸ்லாமிய துதியை உச்சரிக்கக்கூறி பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனா்.

இரு மாதங்களுக்கு முன்பு திருமணமான சுபம் மனைவியுடன் காஷ்மீா் சென்றுள்ளாா். பஹல்காமில் நடந்த தாக்குதலின்போது அவா்கள் இருவரையும் சுற்றி வளைத்த பயங்கரவாதிகள் இஸ்லாமிய துதியைக் கூறி அதனை உச்சரிக்குமாறு அவரை வலியுறுத்தியுள்ளனா். அவா் உச்சரிக்க மறுத்ததால் மனைவியின் கண்ணெதிரில் அவரைச் சுட்டுக் கொன்றனா். மேலும், அவரது மனைவியிடம், ‘உனது கணவரை எப்படி கொலை செய்தோம் என்பதை உங்கள் அரசாங்கத்திடம் கூற வேண்டும்’ என்று பயங்கரவாதி ஒருவா் கூறிவிட்டுச் சென்றுள்ளாா்.

பஹல்காம் தாக்குதல்: இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம்!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் இன்று மாலை மத்திய அரசு விளக்கம் அளிக்கவுள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பயங்கரவாதிகள் நடத்தி... மேலும் பார்க்க

கெளதம் கம்பீருக்கு ஐஎஸ்ஐஎஸ் கொலை மிரட்டல்!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும் முன்னாள் எம்பியுமான கெளதம் கம்பீருக்கு ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் அமைப்பிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தில்லி காவல் நிலையத்தில் புகார்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் சம்மன்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, தில்லியில் உள்ள பாகிஸ்தானுக்கான மூத்த தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை நள்ளிரவு சம்மன் அனுப்பியுள்ளது.இதனைத் தொடர்ந்து நேரில் ஆஜரான தூதரிடம், தில்லியில் ... மேலும் பார்க்க

அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்துவிட்டு தில்லி திரும்பினார் ராகுல்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்துவிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை அதிகாலை தில்லி திரும்பினார்.ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய... மேலும் பார்க்க

காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உளவுத்துறை தோல்வியே காரணம் -அசாதுதீன் ஒவைசி

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுற்றுலா பயணிகள் உள்பட 26 போ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உளவுத் துறையின் தோல்விதான் காரணம் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான அசாதுதீ... மேலும் பார்க்க

பஹல்காமில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ஐஜி தலைமையிலான தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் குழு புதன்கிழமை விசாரணை மேற்கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தெற்கு... மேலும் பார்க்க