தலைமைப் பண்பும் உள்ளுணர்வும்..! ஹார்திக் பாண்டியாவின் பேட்டி!
தங்கம் விலை மீண்டும் குறைவு: இன்றைய நிலவரம்!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 80 குறைந்துள்ளது.
இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 72,120-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை அதிரடியாக சவரனுக்கு ரூ. 2,200 அதிகரித்து ரூ. 74,320-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதனிடையே, புதன்கிழமை காலை மீண்டும் சவரனுக்கு ரூ. 2,200 குறைந்து ஒரு சவரன் ரூ. 72,120-க்கு வர்த்தகமானது.
இந்த நிலையில், இன்று காலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 72,040-க்கும் ஒரு கிராம் ரூ. 9,005-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை தொடர்ந்து நான்காவது நாளாக எவ்வித மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 111-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,11,000-க்கும் விற்பனையாகிறது.
தங்கம் விலை உயர்வு ஏன்?
அமெரிக்க அதிபர் டிரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகள் தொடரும் நிலையில், டாலரின் மதிப்பைக் குறைக்க சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றன. இதனால், தங்கம் விலை சர்வதேச அளவில் உயர்ந்து வருகிறது. இந்தநிலை இந்தியாவிலும் நீடிக்கிறது.
இதனால் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், விரைவில் தங்கம் விலை கிராம் ரூ. 10 ஆயிரத்தை தொடும் என நகை வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.