செய்திகள் :

கும்பகோணத்தில் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

post image

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் இணைந்து, கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து பேசினர்.

இந்த கோரிக்கையை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

"தமிழ்நாட்டில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அனைத்தும் கல்வித் துறையில் உயர்ந்து நாட்டிலேயே முதலிடத்தில் இருப்பதற்குக் காரணமானவர்களில் ஒருவர் கருணாநிதி.

கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டுள்ள பல்வேறு திட்டங்களை உருவாக்கிக் கொடுத்துள்ள, பல்கலைக்கழகங்களுக்கு எல்லாம் பல்கலைக்கழகமாக விளங்கிய கருணாநிதி பெயரில் அவர் பிறந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் விரைவில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும்" என்று அறிவித்துள்ளார்.

500 பேர் தங்கி படிக்க போட்டித் தேர்வு பயிற்சி மையம்: முதல்வர் அறிவிப்பு!

சென்னை ஷெனாய் நகரில் 500 மாணவர்கள் தங்கி பயிலும் வகையில் போட்டித்தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.சட்டப்பேரவையில் இன்று(ஏப். 24) ஒரு சில முக்கிய ப... மேலும் பார்க்க

குடும்ப நல நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மே 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை உயா் நீதிமன்ற வளாகத்துக்குள் குடும்ப நல வழக்குகளை விசாரிப்பதற்காக 8 நீதிமன்... மேலும் பார்க்க

ஆனைமலையாறு - நல்லாறு திட்டம்: கேரள அரசு மெத்தனம் -அமைச்சா் துரைமுருகன் புகாா்

ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தின் கீழ் நீா் எடுக்கும் விஷயத்தில், கேரள அரசு மெத்தனமாக இருப்பதாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் குற்றம்சாட்டினாா். சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது, இ... மேலும் பார்க்க

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: தமிழகம் முழுவதும் போலீஸாா் உஷாா் நிலை

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் முழு உஷாா் நிலையில் ஈடுபட்டுள்ளனா். காஷ்மீா் பெகல்ஹாம் அருகே பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

காஷ்மீரில் சிக்கிய தமிழர்களை விமானம், ரயில் மூலம் அழைத்து வர ஏற்பாடு

ஜம்மு - காஷ்மீரில் சிக்கியுள்ள தமிழர்களை அங்கிருந்து தில்லி வழியாக விமானம், ரயில் மூலம் அழைத்து வர தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் ச... மேலும் பார்க்க

பயங்கரவாத அமைப்புகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் -முதல்வா் மு.க.ஸ்டாலின்

பயங்கரவாத அமைப்புகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று காஷ்மீா் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். மேலும், காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப... மேலும் பார்க்க