செய்திகள் :

குடும்ப நல நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

post image

தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மே 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்ற வளாகத்துக்குள் குடும்ப நல வழக்குகளை விசாரிப்பதற்காக 8 நீதிமன்றங்கள் உள்ளன. அங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வழக்குகள் விசாரணைக்கு முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில், உயர் நீதிமன்ற பெண் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் குடும்ப நல நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதனைப் பரிசீலித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளார் அல்லி, வரும் மே 1 ஆம் தேதி முதல் மே 15 ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாள்கள் விடுமுறையை அறிவித்துள்ளார்.

குடும்ப நல நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற பெண் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், குடும்ப நல நீதிமன்ற அலுவலங்கள் வழக்கம்போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: கும்பகோணத்தில் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்னி வெய்யில் தொடங்குவதற்கு முன்னதாகவே வெளியில் தலைகாட்ட முடியாத அளவிற்கு வெய்யில் கொளுத்தி வர... மேலும் பார்க்க

மற்றொரு வழக்கிலும் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து!

மற்றொரு சொத்துக்குவிப்பு வழக்கிலும் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் 6 மாதங்களுக்குள் வழக்கினை வேலூர் நீதிமன்றம் விசாரித்து முடிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தர... மேலும் பார்க்க

கோடை விடுமுறை: கல்லூரிகள் திறப்பு எப்போது?

கோடை விடுமுறைக்குப் பின் தமிழகத்தில் கல்லூரிகள் ஜூன் 16 ஆம் தேதி திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.2025-2026 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் சுயநிதி கலை, அறிவியல் கல்லூர... மேலும் பார்க்க

500 பேர் தங்கி படிக்க போட்டித் தேர்வு பயிற்சி மையம்: முதல்வர் அறிவிப்பு!

சென்னை ஷெனாய் நகரில் 500 மாணவர்கள் தங்கி பயிலும் வகையில் போட்டித்தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.சட்டப்பேரவையில் இன்று(ஏப். 24) ஒரு சில முக்கிய ப... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில், முன்... மேலும் பார்க்க

ஆனைமலையாறு - நல்லாறு திட்டம்: கேரள அரசு மெத்தனம் -அமைச்சா் துரைமுருகன் புகாா்

ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தின் கீழ் நீா் எடுக்கும் விஷயத்தில், கேரள அரசு மெத்தனமாக இருப்பதாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் குற்றம்சாட்டினாா். சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது, இ... மேலும் பார்க்க