செய்திகள் :

சிம்பு 49 படத்தில் நடிப்பதை உறுதி செய்த சந்தானம்!

post image

நடிகர் சிம்புவின் 49ஆவது படத்தில் நடிப்பதை நடிகர் சந்தானம் உறுதி செய்துள்ளார்.

நடிகர் சிலம்பரசனின் 42-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது 49-ஆவது திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியானது. தற்காலிகமாக இந்தப் படத்துக்கு ’எஸ்டிஆர்49’ எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

’பார்க்கிங்’ திரைப்படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்தப் படத்தினை இயக்குகிறார். சாய் அப்யங்கர் இசையமைக்கிறார்.

டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் இந்தாண்டே திரையரங்குகளில் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது, நாயகனாக நடித்து வரும் சந்தானம் சிம்பு படத்தில் நடிக்கவிருப்பதை உறுதி செய்துள்ளார்.

நேர்காணல் ஒன்றில் சந்தானம் கூறியதாவது:

ஒருநாள் சிம்புவிடமிருந்து அழைப்பு வந்தது. என் படத்தில் நடிக்கிறாயா? எனக் கேட்டார். அவர் கேட்டால் எப்போதும் ஆமாம் என்றுதான் சொல்லுவேன்.

எனது படத்தில் பிஸியாக இருந்தாலும் சிம்பு கேட்டதால் உடனே சரி என்றேன். எஸ்டிஆர் 49 படத்தில் எங்களது அதிரடியைப் பார்க்கலாம் எனக் கூறியுள்ளார்.

படப்பிடிப்பில் நடந்த சுவாரசியங்கள்: கேங்கர்ஸ் படக்குழு வெளியிட்ட விடியோ!

கேங்கர்ஸ் படக்குழு படப்பிடிப்பில் நடந்த சுவாரசியங்களை ஸ்பாட்லைட் எனும் விடியோவாக வெளியிட்டுள்ளது. மத கஜ ராஜா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர். சி இயக்கியுள்ள திரைப்படம் கேங்கர்ஸ்.முழுநீ... மேலும் பார்க்க

சிக்ஸ் பேக் சர்ச்சைக்கு பதிலளித்த விஷால்..! சூர்யா அல்ல, தனுஷ்தான் முதல்முறை!

சூர்யாவுக்கு முன்பாகவே நடிகர் தனுஷ் சிக்ஸ் பேக் வைத்ததாக நடிகர் விஷால் பதிலளித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா ரெட்ரோ எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். காதல் கலந்த ஆக்‌ஷன் படமா... மேலும் பார்க்க

ஜெயிலர் 2 படத்தில் வில்லனாக ஃபஹத் ஃபாசில்?

நடிகர் ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 படத்தில் ஃபஹத் ஃபாசில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ரஜினிகாந்த் நடிப்பில் 2023-இல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது ஜெயிலர் திரைப்படம். இப்படத்தை இயக்குநர... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் இரண்டாவது பாகம் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.அரவிந்த் ... மேலும் பார்க்க

மயோனைஸ் வடிவில் விஷம்.. தடை விதிக்கும் அளவுக்கு ஆபத்தா?

அசைவப் பிரியர்களோ, சைவப் பிரியர்களோ, மயோனைஸ் பிரியர்கள் ஏராளம். அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தமிழகத்தில் மயோனைஸ் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.ஒரு பர்கராக இருக்கட்டும், சிக்கன் 65 ஆ... மேலும் பார்க்க

சமந்தா தயாரித்துள்ள முதல் படத்தின் டிரைலர் அப்டேட்!

சுபம் படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அப்டேட்டினை தனது எக்ஸ் பக்கத்தில் சமந்தா வெளியிட்டுள்ளார். சமந்தா தயாரித்துள்ள முதல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சுபம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம், சீரியல் ... மேலும் பார்க்க