செய்திகள் :

"இந்த ரயில் நிலையத்தின் பணியாளர்களில் ஒருவருக்குக்கூடத் தமிழ் புரியல..." - துரை வைகோ வேதனை

post image

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் முக்கிய நகரமாக விளங்கும் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் இன்று (ஏப்ரல் 24) திடீர் ஆய்வு மேற்கொண்ட திருச்சி எம்.பி.யும் ம.தி.மு.க முதன்மைச் செயலாளருமான துரை வைகோ, ரயில் நிலையம் பராமரிக்கப்படுவது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள துரை வைகோ, ''பிரதான நுழைவாயில்ல ரெண்டு புறமுமே குப்பைக் குவியல்கள்தான். நடைமேடைகளில் பல இடங்களில் விளக்குகள் எரியலை, மாலை வேளையில் இரயில் நிலையத்தின் பல இடங்கள் இருளில் மூழ்கியிருக்கு.

நிலைய மேலாளர் அவரது உதவியாளர் என ரெண்டு பேருதான் பணியில் இருந்தாங்க. இருவருமே தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் பயணிகளின் தேவைகளைப் புரிந்து கொள்ளும் அளவுக்குக்கூட மொழி புரியாதவர்களா இருக்காங்க.

துரை வைகோ எம்.பி

முதல் நடைமேடையில் குளிரூட்டப்பட்ட தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆனால் அது சுத்திகரிக்கப்படாத உப்பு நீர். குடிநீரைக்கூட வழங்க முடியாத நிலையில் இரயில்வே இருப்பது பெருங்கொடுமை.

2வது நடைமேடையில் குடிநீர் இணைப்பே இல்லை. கழிவறைகளின் நிலையும் படுமோசம். பெண்கள் பகுதியில் தண்ணீர் வரவில்லைன்னு பெண் பயணிகள் புகார் தெரிவிச்சாங்க.

விசாரிச்சா, ஒரே ஒரு தூய்மைப் பணியாளர்தான் பணிக்கு வர்றதாகவும், அவரும் முறையா வர்றதில்லனும் தெரியவந்தது. 

கேண்டீன் வசதி இல்லாததால், ரயில் நிலையத்தைக் கடந்து போறவங்க ஒரு தண்ணீர் பாட்டில் கூட வாங்க முடியாத நிலைதான் இருக்கு. இரவு நேரங்கள்ல சமூக விரோதிகளின் நடமாட்டம் இருக்குனு புகார்.

வைகோ - துரை வைகோ
வைகோ - துரை வைகோ

நான்கு ரயில்வே காவலர்கள் பணியில் உள்ளதாகக் கூறப்பட்டாலும், நான் போனப்ப ஒரு காவலர்கூட பணியில் இல்லை.

சிறிது நேரம் கழித்து வந்த ஒரு காவலர், 12 மணி நேரம் தொடர்ந்து பணியமர்த்த படுவதாக தெரிவித்தார். இது உழைப்பு சுரண்டல் மட்டுமல்ல, மனிதாபிமானத்திற்கு எதிரானதும் கூட.

'இதைப் பத்தி ஸ்டேஷன் மாஸ்டரிடம் பேசி, உயர் அதிகாரிகளிடம் புகார் செய்யவில்லையா'ன்னு கேட்டா, அவர் மௌனமாக இருந்தார்.

தனிமனிதர்களைக் குற்றம்சாட்டுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. தென்னக இரயில்வே துறையின் மதுரை கோட்டம் ஏன் இவ்வளவு மெத்தனமாக இருக்குனு தெரியலை. மக்களின் பிரதிநிதியாகக் இதைக் கேள்வி கேட்க வேண்டியது என் கடமை.

அடுத்த ஆய்வில் நான் பாராட்டும்படியாக இருக்கணும்னு சம்பந்தப்பட்ட அதிகாரிகள்கிட்ட கண்டிப்புடன் வலியுறுத்தி விட்டு வந்திருக்கேன்'' என்கிறார் இவர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Pahalgam : இந்தியாவின் நடவடிக்கையால் பாகிஸ்தான் எடுத்த முக்கிய முடிவுகள்; சிம்லா ஒப்பந்தம் ரத்து?

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்திய மட்டுமில்லாது உலக நாடுகள் பலவும் இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலு... மேலும் பார்க்க

'நாங்களும் தயார்' - பாகிஸ்தான் உத்தரவை அடுத்து இந்தியா நடத்தி முடித்த ஏவுகணை சோதனை

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. மேலும், இந்தத் தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி தந்தே ஆக வேண்டும் எனவும், ம... மேலும் பார்க்க

Pahalgam Attack: அட்டாரி - வாகா எல்லை மூடல் - இந்தியா, பாகிஸ்தான்; யாருக்கு என்னென்ன பாதிப்புகள்?

ஜம்மு காஷ்மீரின் பஹால்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக அட்டாரி - வாகா எல்லையை முடியிருக்கிறது. அட்டாரி - வாகா... மேலும் பார்க்க

Pahalgam Attack: `இந்தத் தாக்குதலுக்கு காஷ்மீரை அவதூறு செய்யாதீர்கள்’ - கொலை செய்யப்பட்டவரின் மனைவி

மும்பையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளையின் மேலாளரான ஷீலேஷ் கலாதியா (44), தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சக ஊழியரின் குடும்பத்தினருடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். இதனிடையே... மேலும் பார்க்க

`சிக்கலில் 3 முக்கிய அமைச்சர்கள்... ஒரே நாளில் வந்த அதிரடி உத்தரவுகள்' - என்ன செய்யப்போகிறது திமுக?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கும் சூழலில், நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் எடுத்திருக்கும் நடவடிக... மேலும் பார்க்க

`சண்டை போட்டுகொண்டே இருக்க வேண்டியது தான்’ - மீண்டும் முட்டி மோதி கொண்ட ட்ரம்ப், ஜெலன்ஸ்கி

'மீண்டும் மீண்டுமா?' என்பதுப்போல தற்போது மீண்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே மோதல் தலைதூக்கி உள்ளது. சமீபத்தில், ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை லண்டனில் ... மேலும் பார்க்க