செய்திகள் :

``கதை, திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது!'' - கேம் சேஞ்சர் பற்றி கார்த்திக் சுப்புராஜ்

post image

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் 'ரெட்ரோ' திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

Game Changer
'Game Changer' ராம் சரண்

கடந்த வாரம் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றிருந்தது.

அங்கு சூர்யா, கார்த்திக் சுப்புராஜ், சிவக்குமார் ஆகியோர் பேசிய விஷயங்கள் இணையத்தில் வைரலாகியிருந்தது பலருக்கும் நினைவிருக்கலாம்.

இதை தாண்டி தற்போது படத்தின் ப்ரோமோஷன் நேர்காணல்களில் பிஸியாக இயங்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ்.

அப்படி ஒரு நேர்காணலில் 'கேம் சேஞ்சர்' திரைப்படம் தொடர்பாக அவர் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஷங்கர் இயக்கியிருந்த 'கேம் சேஞ்சர்' படத்தின் கதை கார்த்திக் சுப்புராஜுடையதுதான்.

கடந்த ஜனவரி வெளியாகியிருந்த இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு திரையரங்குகளில் சோபிக்கவில்லை.

Karthik Subburaj

அந்தப் பேட்டியில் கார்த்திக் சுப்புராஜ், " 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தின் ஒன்லைனை நான் ஷங்கர் சாரிடம் கூறியிருந்தேன்.

ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி அரசியல்வாதியாக மாறுகிறார் என்பதை கதையாகக் கொடுத்திருந்தேன்.

அந்தக் கதையை ஷங்கர் சார் எவ்வளவு பிரமாண்டமாக எடுக்கப்போகிறார் என்பதை எண்ணி ஆவலுடன் காத்திருந்தேன்.

இதுதான் நான் கொடுத்த கதையின் உலகம். ஆனால், படம் வித்தியாசமான உலகத்தைக் கொண்டதாக வந்திருந்தது.

கதையில் பல கதாசிரியர்களின் ஈடுபாடு இருந்தது. திரைக்கதை பெரிதளவில் மாற்றப்பட்டது.

கதையும் சிறிதளவில் மாற்றத்தை எட்டியிருந்தது. திரைப்படங்களில் இப்படியான விஷயங்கள் க்ளிக் ஆகும் என்பதை கணிக்க முடியாது.

அது போல, ஒரு திரைப்படம் மக்களுக்கு ஏன் பிடிக்கவில்லை என்பதையும் சொல்ல முடியாது." எனக் கூறியிருகிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`அழகான தமிழ் வார்த்தை; ஆனா இதைச் சொல்லும் போது, vibe-ஆக இல்லையே ப்ரோ என்பார்கள்' - ஷான் ரோல்டன்

டூரிஸ்ட் ஃபேமிலி படத்துக்கு இசையமைத்துள்ள ஷான் ரோல்டன், படத்தின் புரொமோஷன் நிகழ்வில், தமிழ் சினிமாவில் தமிழ் வார்த்தைகள் எழுதும்போது சரியான வரவேற்பு கிடைப்பதில்லை என்பதைக் குறித்துப் பேசியுள்ளார். `நம... மேலும் பார்க்க

Gangers Review: `புதுசு இல்ல, ஆனா பழசும் ஆகலை!' - சுந்தர்.சி - வடிவேலு ரீ-யூனியன் எப்படியிருக்கிறது?

அரசன் கோட்டையிலுள்ள ஒரு பள்ளி மாணவி காணாமல் போகிறார். அவரைத் தேடித் தரச் சொல்லி, முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு, அதே பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் சுஜிதா (கேத்ரின்தெரசா) புகாரளிக்கிறார். அதோடு, அ... மேலும் பார்க்க

jyotika: ``எடை குறைப்புதான் எதிர்காலத்துக்கான சாவி" - Weight Loss பயணம் குறித்து மனம் திறந்த ஜோதிகா

வாலி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. ரஜினி, கமல், விஜய், அஜித் எனப் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகிறார். இடையில் நடிப்புக்கு நீ... மேலும் பார்க்க

Tourist Family: ``இந்தப் படத்தால் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை கிடைக்கணும்'' - சசிகுமார் ஓபன் டாக்

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி' (Tourist Family). குடும்பத் தலைவனாக சசிகுமார் நடிக்க, சிம்ரன், 'ஆவேசம்' படத்தில் நடித்த மிதுன் ஜெய் சங்கர் மற்று... மேலும் பார்க்க