கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்: மேல்முறையீடு மனுக்கள் மீது மே 6, 7-இல் இறுதி விசார...
திருப்பூர் அரசு மருத்துவமனை: சிகிச்சைக்குப் பயந்த இளைஞர்; 4-வது மாடியில் இருந்து குதித்து பலி
மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் விபாஸ் பன்வான்(30). இவர், மேற்கு வங்கத்தில் இருந்து கேரளத்துக்கு பணிக்குச் செல்வதற்காக ரயிலில் வந்துள்ளார். திருப்பூர் அருகே கூலிபாளையம் ரயில் நிலையத்தில், ரயில் வந்து கொண்டிருக்கும்போது ஓடும் ரயிலில் இருந்து விபாஸ் பன்வான் குதித்துள்ளார். இதில், அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. ரத்தக் கயங்களுடன் மீட்டுகப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விபாஸ் பன்வான் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு புதிய கட்டடத்தில் செயல்படும் அவசர சிகிச்சை பிரிவில் விபாஸ் பன்வான் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அங்கு சிகிச்சைக்குப் பயந்த விபாஸ் பன்வான் அங்கிருந்து வெளியேற நினைத்தார். அப்போது அங்கு காவலர்கள் இருந்ததால், 4-ஆவது மாடிக்குச் சென்றுள்ளார்.
இதனிடையே வெளியே செல்ல முடியாமல் சுமார் 2 மணி நேரமாக நான்காவது மாடியிலேயே இருந்த விபாஸ் பன்வான், தன்னை பிடித்து மீண்டும் சிகிச்சைக்கு சேர்த்துவிடுவார்களோ என்று பயந்து, அவசர, அவசரமாக தப்பிக்கும்போது எதிர்பாராத விதமாக 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
அங்கிருந்தவர்கள் இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக தெற்கு போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு சென்ற போலீஸார் விபாஸ்பன்வான் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
