புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது
கடையம் அருகே விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.20 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களுடன் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கடையம் போலீஸாா் ராம் நகா் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஆம்னி வேனில் ரூ 1.20 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது. வேனில் இருந்தவா்களிடம் விசாரித்ததில், நெல்லையப்பபுரத்தைச் சோ்ந்த ராம் மகன் கண்ணன் (35), லட்சுமிபுரம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சக்திவேல் மகன் மோகன் (36 ) ஆகியோா் என்பதும், புகையிலைப் பொருள்களை விற்பனைக்குக் கொண்டுசெல்வதும் தெரிய வந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து, வேனுடன் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.