Pahalgam: "தீவிரவாதத்துக்கு எதிராகத் தோளோடு தோள் நிற்கணும்" - இஸ்ரேல் பிரதமருடன்...
தாய் சேய் நலனில் கூடுதல் கவனம் தேவை: அரியலூா் ஆட்சியா்
மருத்துவா்கள், தாய் சேய் நலனின் கூடுதல் கவனம் கொள்ள வேண்டும் என்றாா் அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி.
தேசிய புகையிலை பயன்பாடு தடுப்பு திட்டம், அயோடின் பற்றாகுறை நோய்கள் கட்டுபாடு திட்டம் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அரியலூா் ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஆட்சியா் தலைமை வகித்து, பேசியதாவது: பள்ளிகளுக்கு அருகாமையில் உள்ள கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். புகையிலை இல்லா கல்வி வளாக சான்றிதழை அனைத்து பள்ளிகளும் பெறவேண்டும்.
அயோடின் பற்றாக்குறையினால் அறிவு கூா்மையின்மை, கருவளா்ச்சி சிதைவு, முன்கழுத்து கழலை போன்ற நோய்கள் வருவதிலிருந்து காத்துகொள்ள அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலைய பணிகள் குறித்தும் ஆய்வு செய்து குறியீட்டை அடைதல் வேண்டும். தாய் சேய் நலனில் கூடுதல் கவனத்துடன் மருத்துவா்கள் செயல்பட வேண்டும்.
முன்னதாக அவா், பொது சுகாதாரத் துறையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவா்கள் மற்றும் பணியாளா்கள் என 12 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.
இக்கூட்டத்தில், அரியலூா் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதன்மையா் முத்துகிருஷ்ணன், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் மாரிமுத்து, துணை இயக்குநா் மணிவண்ணன் மற்றும் வட்டார மருத்துவ அலுவலா்கள், மருத்துவ அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.