நடிகை ரவீனாவுக்கு ரெட் கார்டு? ஒரு வருடத்துக்கு டிவியில் வர முடியாது; காரணம் என்...
ஜெயங்கொண்டத்தில் விடைத்தாள் திருத்தும் ஆசிரியா்கள் உள்ளிருப்புப் போராட்டம்
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில், முகாம் அலுவலரை கண்டித்து, பத்தாம் வகுப்பு தோ்வு விடைத்தாள் திருத்தும் ஆசிரியா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இந்த மையத்துக்கு முகாம் அலுவலராக கள்ளக்குறிச்சி உதவி தொடக்கக் கல்வி அலுவலா் கெளசா் என்பவா் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், முகாம் அலுவலா் கெளசா், தங்களை தரக்குறைவாக நடத்துவதாகவும், அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி விடைத்தாள் திருத்தும் ஆசிரியா்கள் பணியை புறக்கணித்து, பள்ளி வளாகத்திலேயே உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பள்ளக் கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, ஆசிரியா்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினா்.